பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாட்டுச் சிறப்பு 161

படும் இயல்பினாலும் காவிரி ஆறு விளக்கத்தைப் பெறும், பாடல் வருமாறு:

"மாலின்உங் திச்சுழி மலர்தன் மேல்வரும்

சால்பினால் பல்லுயிர் தருதன் மாண்பினால் கோலங்ற் குண்டிகை தாங்கும் கொள்கையாற் போலும்கான் முகனையும் பொன்னி மாதி,’’ மாலின்-திருமாலினுடைய; பெருமையோடு. உந்திகொப்பூழாகிய, நீரைத் தள்ளி. ச்: சந்தி. சுழி மலர்சுழியாகிய தாமரை மலர்: நீர்ச்சுழிகளும் மலர்களும்; ஒருமை பன்மை மயக்கம். தன்மேல்-அதன்மேல்; தன்னு டைய நீரின்மேல். வரும்-தோன்றும்; மிதந்து வரும். சார்பினால்-அமைதியாய். பல உயிர்-பல வகையான உயிர்களை ஒருமை பன்மை மயக்கம். தருதல்-படைத்த லாகிய, தன்னிடம் ஓடிவரும் நீரைக் குடித்து வாழச்செய்து பாதுகாத்தலாகிய, மாண்பினால்-மாட்சிமையால். கோல -அழகைப் பெற்ற நல்-நல்ல. குண்டிகை-கமண்ட லத்தை அகத்திய முனிவனுடைய கமண்டலம், தாங்கும்எடுத்துக்கொண்டிருக்கும்: முகந்து கொள்ளப்படும். கொள் கையால்-இயல்பால், பொன்னி-பொன்னைக் கொழிக்கும். மா-பெருமையைப் பெற்ற, நதி-காவிரியாறு: 'பொன்னி பொன்கொழிக்கும்,' என வருதலைக் காண்க. நான் முகனையும்-நான்கு முகங்களைக் கொண்ட பிரமதேவ னையும்; முகன்:ஒருமை பன்மை மயக்கம். போலும்-போல விளங்கும். - - *

பிறகு வரும் 5-ஆம் பாடல் கங்கையாற்றுக்கும் காவிரியாற்றுக்கும் சிலேடை. அதன் கருத்து வருமாறு:

கங்க்ையாற்றின் இயல்புகள் வருமாறு: பிறைச் சந்தி ரனைத் தன்னுடைய தலையில் தங்க வைத்திருக்கும் ஒவ பெருமானுடைய திருமுடியில் பொங்கி யெழும் வெண்மை யான நீரின்மேல் உள்ள துரை மோதிக்கொண்டு ஒடுவதால்.

பெ-11 -