பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 பெரிய புராண விளக்கம்

களாவன: சம்பா நெற்பயிர் விளையும் வயல், குறுவை நெற்பயிர் வளரும் வயல், கரும்புத் தோட்டம், செவ் வாழை மரத் தோட்டம், கருவாழை மரத் தோட்டம், பச்சை நாடன் வாழை மரத் தோட்டம், பேயன் வாழை மரத்தோட்டம், மொந்தன் வாழை மரத் தோட்டம்,வரகுப் பயிர் வினையும் புன்செய்,தினைப் பயிர் விளையும் புன்செய்; கேழ்வரகுப் பயிர் வளரும் புன்செய் முதலியவை. பூமகட்குபூமி தேவிக்கு. நல்-நல்ல. செவிலி-வளர்ப்புத் தாயை. போன்றது-போல விளங்குவது. வையம்-இந்த உலகத் தில் வாழும். பல்-பல வகையான. உயிர்-உயிர்களை, ஒருமை பன்மை மயக்கம். அந்த உயிர்களாவன:மனிதர்கள், பலவகை விலங்குகள், பலவகைப் பறவைகள், மரம் செடி கொடி வகைகள், ஊர்வன, நீர்வாழ் பிராணிகள் முதலியவை வளர்த்துவளரச்செய்து. நாள்தொறும்-ஒவ்வொரு நாளும். உய்ய-உயிரோடு வாழும் வண்ணம். ஏ: அசைநிலை. சுரந்து-நீரைச் சுரந்து. ஊட்டும்-உண்ணச் செய்யும். நீரது-இயல்பைக் கொண்டது. " r

அடுத்து உள்ள 4-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'திருமாலினுடைய கொப்பூழ்ச் சுழி யாகிய தாமரை மலரின்மேல் தோன்றும் இயல்பினால், பல உயிர்களைப் படைக்கும் மாட்சிமையினால், அழகை உடைய நல்ல கமண் டலத்தை எடுத்துக் கொண்டிருக்கும் செயலால், அந்தப் பொன்னைக் கொழிக்கும் காவிரியாகிய பெருமையைப் பெற்ற ஆறு நான்கு முகங்களைக் கொண்ட பிரமதேவனை யும் போல விளங்குவது. இந்தப் பாடல் பிரமதேவனுக்கும் ஆாவிரியாற்றுக்கும் சிலேடை. மேலே சொன்னது நான்முக னுடைய இயல்புகளை. இனிக் காவிரியாற்றின் இயல்புக்கு ஏற்றவாறு அமையும் பொருள் வருமாறு: x

பெருமையோடு நீரைத் தள்ளி நீர்ச்சுழிகள் தன்மேல் வருகின்ற இயல்பாலும், பல உயிர்களைத் தன்னிடம் ஒடும். நீரைக் குடித்து வாழச் செய்து காப்பாற்றும் மாட்சியாலும், அழகைப் பெற்ற நல்ல கமண்டலத்தில் முகந்து கொள்ளப்