பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாட்டுச் சிறப்பு - 1.59%

வாயு, ஆகாசம் என்னும் ஐம்பெரும் பூதங்களில் ஒன்றாகிய;. ஒருமை பன்மை மயக்கம். நீர்-நீர் நிரம்பிய.க்:சந்தி. கமண் டலம்-குண்டிகை.பொழிந்த-விநாயகப் பெருமான் காக்கை யின் வடிவத்தில் வந்து கவிழ்த்ததனால் தரையில் விழுந்து ஒடிய. காவிரி-காவிரியாறு: 'அமர முனிவன் அகத்தியன் தனாது, கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை. (பதிகம்,11-12) என்று மணிமேகலையில் வருவதைக் காண்க. மாதர் --காதல் மருவிய. மண்மடந்தை-பூமிதேவியினுடைய.. பொன்-பொலிவைக் கொண்ட, மார்பில்-மார்பகத்தில். தாழ்ந்தது-தொங்கியதாகிய, ஒர்-ஒரு. ஒதம்-கடல் அலையில் உள்ள நீர்-நீரில் பிறந்த நித்தில-முத்துக் களைக் கோத்த ஒருமை பன்மை மயக்கம். தாமம்மாலையை ஒக்கும்-ஒத்து விளங்கும். ஆல்:ஈற்றசை நிலை. - . . . . . - பிறகு உள்ள 3-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அந்தக் காவிரி ஆறு பெருமையைப் பெற்ற சையாத்திரி யில் தங்கியிருந்த தலைமையை மிகுதியாகப் பெற்றது: வயல்களைப் பெற்ற பூமி தேவிக்கு ஒரு செவிலித் தாயைப் போல விளங்குவது; இந்தப் பூமியில் வாழும் பல வகையான உயிர்களை வளரச் செய்து ஒவ்வொரு நாளும் உயிரோடு, இருக்கும் வண்ணம் நீரைச் சுரந்து உண்ணச் செய்யும் இயல்பைக் கொண்டது. பாடல் வருமாறு: " ; , சையமால் வரையில் தலைமை சான்றது. செய்யபூ மகட்குநற் செவிலி போன்றது: வையகம் பல்லுயிர் வளர்த்து நாடொறும் உய்யவே சுரந்தளித் துரட்டும் கீரது.' மால்-பெருமையைக் கொண்ட சைய - சஹ்யமென் னும் குடகு. வரை-மலையில். பயில்-தங்கும். தலைமை -தலைமைப் பதவியை சான்றது-மிகுதியாக உடையது. செய்ய-பல வகையாகிய வயல்களைப் பெற்ற. அந்த வயல்