பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 பெரிய புராண விளக்கம்

தாய்.”, வானோர் தலைவா.’’ என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், சைவா போற்றி தலைவா போற்றி.',' தன்மை பிறரால் அறியாத தலைவா. ', 'கயிலாய மென்னும் மலைத்தலைவா.’, ‘நந்தம்மை ஆட்கொண்ட நாயுகனை."', 'நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாய கனை.’’, ‘நாயகனுக் கெவ்விடத்தோம்.’’, * எங்கள் நாயகனே.", செங்கண் நாயகனே' என்று மாணிக்க

வாசகரும் பாடியருளியவற்றைக் காண்க.

அடுத்துவரும் 6-ஆம் பாடலின் கருத்து வருமாறு: இந்தப் பாடல் காவிரிக்கும் பார்வதி அம்மைக்கும் 936ునా t—- காவிரியாற்றுக்குப் பொருந்தும் பொருள் வருமாறு: :நீல வண்ணத்தைப் பெற்றதும் உயரமாக விளங்குவதும் ஆகிய குடகுமலையில் பிறந்து ஓடிவந்த மேம்பாட்டைப் பெற்றமையால், கணக்கு இல்லாத பெரியவையாகிய முப்பத் இரண்டு தருமங்களையும் தன்னிடம் உள்ள நீரினால் வளரச் செய்யும் கொடையால் விளங்குவது காவிரி ஆறு."

இனி பார்வதி தேவியின் இயல்புக்குப் பொருந்தும் பொருள் வருமாறு:

  • அழகியதும் உயரமானதும் ஆகிய இமயமலை யாகிய அரசன் பெற்று வழங்கத் திருவவதாரம் செய்தருளிய மேம் பாட்டாலும் கணக்கு இல்லாத தருமங்களை வளரச்செய் பும் மேம்பாட்டாலும் விளங்குபவள் அந்த அம்மை, தலைவ ன்ர்கிய கைலாசபதியினுடைய வாம பாகத்தை ஆட்சிபுரியப் பெற்ற தலைவியாகிய பார்வதி தேவியின் திருவுள்ளத்தில் நெகிழ்ச்சியைக் கொண்ட கருணையினுடைய ஒட்டத்தைப் போல விள்ங்குவது காவிரி ஆறு. பாடல் வருமாறு:

வண்ணள்ே வர்ைதர வந்த மேன்மையால் எண்ணில்பேரறங்களும் வளர்க்கும் ஈகையால் அண்ணல் பாகத்தை ஆளுடை நாயகி

உண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது.