பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாட்டுச் சிறப்பு - 165

அன்னம்-நீல நிறத்தைப் பெற்றதும்; அழகிய நிறத் தைப் பெற்றதும். நீள்-உயரமாக விளங்குவதுமாகிய, வரை-குடகுமலை: இமயமலையாகிய அரசன்; திணை மயக்கம். தர-வழங்கியதால், பெற்றதால். வந்த-சம் இசிக்கு இறங்கி ஓடிவந்த திருவவதாரம் செய்தருளிய, மேன்மையால்-மேலான தன்மையால்: மேம்பாட்டினால். எண்-கணக்கு. இல்-இல்லாத; கடைக்குறை.பேறங்களும்பெருமையைப் பெற்ற முப்பத்திரண்டு தருமங்களையும்: வளர்க்கும்-தன்னிடத்தில் ஒடும் நீரால் பயிர்களுக்குப் பாய்ந்து நெல் முதலியவற்றை நன்றாக ஓங்கி வளரச் செய்யும், பரமேசுவரன் வழங்கிய இரண்டு படிகள் நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் வளரும் வண்ணம் செய்தருளும். ஈகையால்-விளைந்த தானி யங்களை வழங்குவதற்குக் காரணமாக இருத்தலால்: கொடையால், அண்ணல்-தலைவனாகிய ஏகாம்பரேசுவர லுடைய. பாகத்தை-வாம பாகத்தை. ஆளுடைய.-ஆட்சி செய்யும் இடமாகப் பெற்ற.நாயகி-தலைவியாகிய காமாட்சி அம்மையினுடைய. உள்-திருவுள்ளத்தில். நெகிழ்-நெகிழ்ச் சியைப் பெற்றுத் திகழும். கருணையின்-பேரருளினுடைய. ஒழுக்கம்-இடைவிடாது பெருகுவதை. போன்றது-போல, விளங்குவது காவிரி ஆறு.

அடுத்து உள்ள 7-ஆம் பாடல் காவிரி ஆற்றுக்கும் சிவ்னடி, யார்களுக்கும் சிலேடை. அதன் கருத்து வருமாறு: -

காளிரியாற்றுக்கு ஏற்ற பொருள் வருமாறு: "நறுமணம் கமழும் பல மலர்கள் மிதந்து வரும் நீரோடு பல ஊர் களின் வழியாக ஒடிச்சிவந்த தங்கம் மிகுதியாக உள்ள தன் கரையில் விளங்கும் கணக்கு இல்லாத திருக் கோயில்களில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானாகிய சிவ. பெருமானை வணங்குடவர்களுக்கும், ஆராதனை செய்பவர் களுக்கும் அபிடேக நீராகவும், பிரசாதந் தீர்த்தமா