பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 பெரி ய புராண விளக்கம்

பயன்படுவது குளிர்ச்சியைப் பெற்றதும் பொன்னைக் கொழிப் பதும் ஆகிய காவிரி ஆறு.

இனிச் சிவனடியவர்களுக்கு ஏற்ற பொருள் வருமாறு, "நறுமணம் கமழும் மலர்களால் அருச்சனை செய்தும் நீரால் அபிடேகம் புரிந்தும் வணங்கிச் சிவந்த தங்கம் உள்ள நீண்ட காவிரிக் கரையில் விளங்கும் கணக்கு இல்லாத திருக் கோயில்களில் எழுந்தருளியிருக்கும் எம்பெரு மான்களாகிய சிவபெருமான்களை வணங்குவார்கள் இத்னால் குளிர்ச்சியான நீர் ஓடுவதும், பொன்னைக் கொழிப்பதுமாகிய காவிரியாறு தேவர்களின் தலைவ ராகிய சிவபெருமானாருடைய பக்தர்களையும் ஒத்து விளங்கும். பாடல் வருமாறு:

'வம்பு லாமலர் நீரால் வழிபட்டுச்

செம்பொன் வார்கரை எண்ணில் சிவாலயத் தெம்பி ரானை இறைஞ்சலின் ஈர்ம்பொன்னி உம்பர் நாயகர்க் கன்பரும் ஒக்குமாம்.' - வம்பு-நறுமணம்.உலாம்-மிதந்து வரும்; கமழும்.மலர்-பல மலர்கள் மிதந்து வரும்; பலவகை மலர்களால் அருச்சனை புரிந்து- நீரால்-தன்னிடம் ஒடும் நீரினால், நீரைக் கொண்டு அபிடேகம் செய்து உருபு மயக்கம், வழிபட்டு-பல ஊர் களின் வழியாக ஓடி வணங்கி வழிபாட்டைப் புரிந்து. ச் சந்தி. செம்-சிவந்த பொன்-தங்கம் உள்ள. வார்-நீள ம்ான கரை-தன் கரையில் விளங்கும்; காவிரிக்கரையில் உள்ள எண்-கணக்கு. இல்-இல்லாத கடைக்குறை. சிவாலயத்து-சிவபெருமான்களின் திருக்கோயில்களில்; ஒருமை பன்மை மயக்கம். எம்பிரானை-எழுந்தருளியிருக்கும் எம் பெருமான்களாகிய சிவபெருமான்களை ஒருமை பன்மை மயக்கம். இறைஞ்சலின்-வணங்கும் பக்தர்களுக்கும் ஆராதனை செய்யும் சிவாசாரியார்களுக்கும் முறையே பிரசா தத் தீர்த்தமாகவும், அபிடேக நீராகவும் பயன்படுவதனால், ஈர்ம்-குளிர்ச்சியை உடைய நீர் ஒடுவதும் பொன்னி