பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாட்டுச் சிறப்பு 167 பொன்னைக் கொழிப்பதும் ஆகிய காவிரியாறு. உம்பர்தேவர்களுடைய ஒருமை பன்மை மயக்கம். நாயகர்க்குதலைவராகிய சிவபெருமானாருடைய உருபு மயக்கம், அன்பரும்-பக்தர்களையும்; ஒருமை, பன்மை மயக்கம். ஒக்கும்-காவிரியாறு ஒத்து விளங்கும்: ஆல்: ஈற்றசைநிலை.

பிறகு உள்ள 8-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "நறுமணம் கமழும் காவிரியாற்றில் ஒடும் நீரில் முழுகித் துளையும் மங்கைப்பருவத்தைப் பெற்ற பெண்மணிகளுன் டய கொங்கைகளில் அவர்கள் பூசிக்கொண்டிருந்த குங்குமப் பூவின் குழம்பும் சந்தனமும் வீசுகின்ற தெளிவான அலை களின்மேல் அவர்களுடைய திருமேனிகளிலிருந்து வழிந்து ஒடுகின்ற ஆற்றின் புனல் ஒளியை உடையது என்றாலும் தெளிவு இல்லாமல் இருப்பது ஆகும். பாடல் வருமாறு:

"வாச நீர்குடை மங்கையர் கொங்கையில்

பூசு குங்கும மும்புனை சாந்தமும் விசு தெண்டிரை மீதிழிந்தோடுநீர் தேசு டைத்தெனி னும்தெளிவில்லதே. - வாச-நறுமணம் கமழும்.நீர்-காவிரிஆற்றில் ஒடும் நீரில். குடை- முழுகித் துளையும். மங்கையர்-மங்கைப் பருவத்தை அடைந்த பெண்மணிகள். கொங்கையில்-தங்க ளுடைய கொங்கைகளிள் மேல்; ஒருமை பன்மை மயக்கம். பூசு-பூசிக்கொண்டிருக்கும்: குங்குமமும்-குங்குமப் பூவின் குழம்பும். புனை-அவர்கள் தங்களுடைய திருமேனிகளின் மேல் அன்னிந்திருந்த சாந்தமும்-அரைத்த சந்தனமும். வீசு-வீசுகின்ற, தெண்-தெளிவையுடைய, திரைமீதுஆற்றின் அலைகளின்மேல்: திரை: ஒருமை பன்மை மயக்கம். இழிந்து-வழிந்து. ஒடு-ஆற்றில் ஒடும். நீர்புனல். தேசு-ஒளியை, தேஜஸ் என்ற வடசொல்லின் திரிபு. உடைத்து-பெற்றது. எனினும்-என்றாலும்: இடைக்குறை. தெளிவு இல்லது-தெளிவு இல்லாமல் இருப்பது ஆகும். ஏ: ஈற்றசை நிலை * ...。ー。