பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பெரிய புராண விளக்கம்

சந்தனத்தைப் பெண்மணிகள் பூசிக்கொள்ளுதல்: 'சந்தனறேறு தடங்கொள் கொங்கைத் தையல்.’’, ‘சந்த மார் முலையாள்’ என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனா ரும், சந்தணி கொங்கையாள்' என்று திருநாவுக்கரசு நாயனாரும் பாடியருளியவற்றைக் காண்க.

பிறகு உள்ள 9-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

வண்டுகள் ஒலித்து எழுந்து ரீங்காரம் செய்ய மலை வழங்கிய மலர்கள் விரிந்து ஒழுகச் செய்த புதிய தேன் பொங்கி எழ வாலியினால் விளங்கும் சோழநாடு நீர்வளத் தையும் நிலவளத்தையும் செல்வ வளம் முதலியவற்றையும் வழங்கி வர, காவிரி ஆற்றில் ஒடும் நீர் கால்வாய்களிற் பரவிச் சென்று ஓங்கிச் சிறப்பைப் பெற்றிருக்கும். பாடல் வருமாறு:

'மாவிரைத்தெழும் தார்ப்ப வரைதரு

ஆவி ரித்த புதுமதுப் பொங்கிட . வாவி யிற்பொலி நாடு வளம்தரக் காவிரிப்புனல் கால்பரங் தோங்குமால்."

- மா-வண்டுகள்; ஒருமை பன்மை மயக்கம். இரைத்துஒலியைச் செய்து. எழுந்து-தாங்கள் தேனைக் குடித்த மலர்களிலிருந்து எழுந்து. ஆர்ப்ப-ரீங்காரம் செய்ய, வரை-மலையில். திரு-உண்டாகிய, பூ-மலர்கள்; ஒருமைபன்மை மயக்கம். விரித்த-மலர்ந்து ஒழுகச் செய்த, புது-புதிய. மது-தேன். பொங்கிட-பொங்கி எழ. வாவியில்-வாவியினால், உருபுமயக்கம்: வாபி' என்னும் வடசொல் திரிபு. பொலி-விளங்கும். நாடு-சோழநாடு. வளம்-நீர்வளம், நிலவளம், செல்வவளம் முதலியவற்றை: 'ஒருமை பன்மை மயக்கம். தர-இடைவிடாம்ல் வழங்கிவர, க்: சந்தி, காவிரி-காவிரி ஆற்றில் ஒடும். ப், சந்தி. புனல் -நீர். கால்-கால்வாய்களில்; ஒருமை பன்மை மயக்கம் ரந்து-பரவிச் சென்று. ஒங்கும்-ஓங்கிச் சிறப்பைப் பெற்று விளக்கும். ஆல் இறுதி அசை நிலை.