பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாட்டுச் சிறப்பு 169,

அடுத்து வரும் 10-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'காவிரியாற்றினுடைய ஒளியைக் கொண்ட துறையாகிய இடத்திலிருந்து பெரிய மதகுகளின் வழியில் சென்று மிகுதி "ாகப் பாயும் அந்த ஆற்றில் உள்ள நீர் வயல்களுக்குள் பாய அந்த நீரை எதிர்கொண்டு வரவேற்ற உழவர்கள் திட்டிஎழுப்பிய கைகளின் ஒலி சென்று தேவர்கள் வாழும் தேவலோகத்திற்கு அப்புறத்திலும் போய்க் கேட்கும்.’பாடல் . வருமாறு: -

'ஒண்து றைத்தலை மாமத கூடுபோய்.

மண்டு நீர்வய லுட்புக வந்தெதிர் கொண்ட மள்ளர் குரைத்தகை ஓசைபோய் . அண்டர் வானத்தின் அப்புறம் சாருமால். ' ஒண்-காவிரி ஆற்றினுடைய ஒளியைக்கொண்ட துறைதுறையாகிய தலை-இடத்திலிருந்து. மா-பெரிய மத கூடு-மதகுகளின் வழியில்; ஒருமை பன்மை மயக்கம். மதகு-நீர்பாயும் சிறிய கால்வாய். போய்-ஓடிச் சென்று. மண்டு-மிகுதியாகப் பாயும். நீர்-அந்த ஆற்றில் ஒடும் புனல். வயலுள்-வயல்களுக்கு உள்ளே ஒருமை பன்மை மயக்கம். புக-நுழைந்து பாய வந்து-அந்த வயல்களுக்கு வந்து. எதிர்கொண்ட-அந்த ஆற்றின் நீரை எதிர் கொண்டு வரவேற்ற, மள்ளர்-உழவர்கள்; ஒருமை. பன்மை மயக்கம். குரைத்த-தட்டி எழுப்பிய, கை-அவர் கள் கைகளின் ஒருமை பன்மை மயக்கம். ஒசை-ஒலி. போய்-சென்று. அண்டர்-தேவர்கள் வாழும்; ஒருமை பன்மை மயக்கம், வானத்தின்-தேவலோகத்திற்கு. அப்பு றம்-மேலும். சாரும்-போய்க் கேட்கும். ஆல்: ஈற்றசை நிலை.

அடுத்து உள்ள 11-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

விருப்பம் மருவிய இழிகுலப் பெண்களாகிய பள்ளிகள் நெற்பயிர்களினுடைய நாற்றுக்களைப் பிடுங்குகிறவர்களி