பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பெரிய புராண விளக்கம்.

மலர்களில் மொய்க்கும் சிறகுகளைப் பெற்ற; சிறை: ஒருமை பன்மை மயக்கம். வண்டை-வண்டுகளை; ஒருமை பன்மை மயக்கம். அம்-அழகிய கை-தங்களுடைய கைக ளாகிய ஒருமை பன்மை மயக்கம். மலர்களை-செந்தா மரை மலர்களை. க், சந்தி. கொடு-கொண்டு. கைத்துஅந்த வண்டுகளை ஒட்டி விட்டு. அயல்-பக்கத்தில் பறக்கும் வேறு. வண்டும்-வண்டுகளையும்; ஒருமை பன்மை மயக்கம். வரவழைப்பார்-வரும் வண்ணம் அழைப்பார்கள், ஒரும்ை பன்மை மயக்கம். திங்கள்-சந்திரனைப் போன்ற, நுதல்தங்களுடைய நெற்றிகளில், ஒருமை பன்மை மயக்கம். வெயர்வு-வேர்வைத் துளிகள்; ஒருமை பன்மை மயக்கம். அரும்ப-அரும்புகளைப் போலத் துளிக்க. ச்: சந்தி. சிறுசிறிய முறுவல்-புன்னகை. தளவு-முல்லை மலரைப்போல. அரும்ப முகிழ்க்க ப்:சந்தி. பொங்கு-அந்த வயல்களில் பொங்கி எழுந்து வளர்ந்துள்ள. மலர்க் கமவத்தின்-தாமரை மலர்களில் உள்ள ஒருமை பன்மை மயக்கம்; பின் முன் னாகத் தொக்க தொசை. புது-புதிய. மது-தேனை வாய்t தங்களுடைய வாய்களில் ஒருமை பன்மை மயக்கம், மடுத்துவிட்டுக்கொண்டு. அயர்வார்-சோர்வை அடைவார்கள்; ஒருமை பன்மை மயக்கம். பெண்மணிகளின் நெற்றிகளுக்குச் சந்திரன் உவமை: "மதிறுதல் மங்கையோடு.', 'வாணிலா மதிபோல் நுதலாள்.' என்று திருஞான் சம்பந்த மூர்த்தி நாயனாரும், "பிறைநுதல் பேதை மாதர் உமை.”, பிறை நுதற் பேதைமாதர் பெய்வளை யார்க்கும்.', 'பிறைகொள் ளாள் நூற் பெய்வளைத்-தோளியர். 'என்று திருநாவுக்கரசு நாயனாரும்.’’, பிறைநுதல் மங்கையொடும்.', *பிறை - யணிலாள் நுதலாள் உமையானவள்.' என்று சுந்தரமூர்த்தி

நாயனாரும். பாடியருளியவற்றைக் காண்க. X

பெண்களின் புன்னகைக்கு முல்லை மலர் உவமை: முல்லை. வெண்ணகை மொய்குழலாய்' என்று திருநாவுக்