பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாட்டுச் சிறப்பு 175.

கரசு நாயனாரும், முல்லை முறுவல் உமை.’’ என்று: சுந்தரமூர்த்தி நாயனாரும் பாடியருளியவற்றைக் காண்க. அடுத்து உள்ள 15 ஆம் பாடலின் கருத்து வருமாறு: இவை கரும்புச் செடிகள் அல்ல நெற்பயிர்கள் என்று சொல்லும் வண்ணமும், இவை கமுக மரங்கள் அல்ல,கரும்புச் செடிகள் என்று மயங்குமாறும், வண்டுகள் அல்லிமலர்களை உள்ளே புகுந்து குடைந்து வெளிப்படுத்தும் நீல நிறத்தைக் கொண்ட மகரந்தப் பொடிகள் அல்ல, யாவும் பகல் வேளையே ஆகும் என்று மயங்கும் வண்ணமும், இவை அரும்புகள் அல்ல, மகளிரின் கொங்கைகள் என்று கூறும் வண்ணமும் அவை விளங்கும்.இவை அமுதத்துளிகள் அல்ல, பெண்மணிகளின் இனிய சொற்கள் என்று கூறுமாறு திகழும். இவ்வாறு வயல்களுக்குப் பணி புரிய வரும் பல ஆயிரம் இழி, குல மடந்தையர்களாகிய பள்ளிகள் வயல்கள் எல்லாவற்றி லும் காணப்படுவார்கள். பாடல் வருமாறு: - கரும்பல்ல நெல்லென்னக்'

கமுகல்ல கரும்பென்னச் க்ரும்பல்லி குடைநீலத்

துகளல்ல பகலெல்லாம் அரும்பல்ல முலையென்ன

அமுதல்ல மொழியென்ன வரும்பல்லா யிரம்கடைசி

மடந்தையர்கள் வயலெல்லாம். கரும்பு அல்ல-இவை கரும்புச் செடிகள் அல்ல:'ஒருமை பன்மை மயக்கம். நெல்-நெற்பயிர்கள்: ஒருமை பன்மை மயக்கம். என்ன-என்று கூறும்படியும். க்சந்தி. கமுகு, அல்ல.இவை பாக்கு மரங்கள் அல்ல: ஒருமை பன்மை மயக்கம். கரும்பு-கரும்புச் செடிகள்: ஒருமை பன்மை மயக்கம். என்ன-என்று சொல்லுமாறும் ச்சந்தி. சுரும்புவண்டுகள்; ஒருமை பன்மை மயக்கம். அல்லி- நீலோற்பல. o மலர்களின் அக இதழ்களை ஒரும்ை பன்மை மயக்கம். குடை