பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 பெரிய புராண விளக்கம்

-உள்ளே புகுந்து குடைவதனால் வெளிப்படும். நீல-நீல நிறத்தைக்கொண்ட த்: சந்தி துகள் அல்ல.மகரந்தப் பொடிகள் அல்ல; ஒருமை பன்மை மயக்கம்.பகல் எல்லாம்இவ்வாறு பகல் நேரம் முழுவதும் தோற்றத்தை அவை அளிக்கும். அரும்பு அல்ல-இவை அரும்புகள் அல்ல: ஒருமை பன்மை மயக்கம்: முலை-இழிகுலப் பெண்க ளாகிய பள்ளிகளின் கொங்கைகள்; ஒருமை பன்மை மயக்கம். என்ன என்று மயங்கும்படியும். அமுது அல்லஇவை அமுதத் துளிகள் அல்ல! ஒருமை பன்மை மயக்கம். மொழி-அந்தப் பள்ளிகள் பேசும் இனிய வார்த்தை கள்: ஒருமை பன்மை மயக்கம். என்ன-என்று நவிலும் வண்ணமும். வரும்-வயல்களுக்குப் பணிகளைப் புரிய வரும். பல் ஆயிரம்-பல ஆயிரமாகிய, கடைசி மடந்தையர்கள்இழிகுலத்தில் பிறந்தவர்களும் மடப்பத்தை உடையவர்களு மாகிய பள்ளிகள். வயல்-வயல்கள்; ஒருமை பன்மை மயக்கம். எல்லாம்-எல்லாவற்றிலும் காணப்படுவார்கள். பெண்மணிகளின் கொங்கைக்கு அரும்பு உவமை: அரும் :பும் குரும்பையும்.அலைத்தமென் கொங்கை.’’,"அரும்பினார் முலை மங்கை.’, ‘அரும்பன வனமுலை அரிவையோடு.", அரும்பமர் கொங்கையோர் பால்மகிழ்ந்த.' என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும். அருப்புப் போல் முலையார்', அருப்போட்டு முலைமடவாள்', என்று திருநாவுக்கரசு நாயனாரும் பாடியருளியவற்றைக் .காண்க . : -

பிறகு உள்ள 16-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

கயல் மீன்கள். துள்ளிப் பாயும் பசுமையான நீர் நிறைந்த தடாகத்தில் மாமிசம் அற்றுப் போன சங்காகிய பெருமை - யைப் பெற்றதும், கருமையானதும் ஆகிய பானையில் விரி வான வாயைக்கொண்ட வெண்மை நிறம் உள்ள சங்குப் பூச்சிகள் உமிழ்ந்த முத்துக்களாகிய அரிசிகளை மலர்களில் நிரம்பியிருக்கும் தேனாகிய உலையில் இட்டு அங்கே பக்கத்