பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is0 பெரிய புராண் விளக்கம்

ஆலைகரும்பு ஆலையில். பாய்பவர்-கருப்பஞ் சாற் றைக் காய்ச்சும் மக்களாகிய பாய்பவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். ஆர்ப்புறும்-முழங்கும். ஒலமும்-முழக்கமும். சோலைவாய்-பூம்பொழிலில். வண்டு-வண்டுகள்: ஒருமை பன்மை மயக்கம். இரைத்து-ரீங்காரம் செய்துகொண்டு, எழு தாங்கள்தேனைக் குடிக்கப் புகுந்த மலர்களிலிருந்து மேலே எழும். சும்மையும் ஒலியும், ஞாலம்-இந்தப் பூமண்ட லத்தில். ஓங்கிய-ஓங்கிச் சிறப்பைப் பெற்ற. நான்மறைஇருக்கு வேதம், யஜுர் வேதம் சாம வேதம், அதர்வன வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறைப்படி அத்திய யணம் செய்து நிறைவேற்றிய வேதியர்கள்; திணை மயக்கம். மறை: ஒருமைபன்மை மயக்கம்.ஒதையும்-கானம் செய்யும் இனிய நாதமும். வேலை-சமுத்திரத்தில் வீசும் அலைகள் "செய்யும்; இட ஆகு பெயர். ஒசையின்-பேரொலியைவிட, மிக்கு-மிகுதியாகி..விரவும்-பரவிக் கேட்கும். ஆல்:ஈற்றசை நிலை. ஒலம், சும்மை, ஓசை என்பவை ஒரே பொருளை உடைய வேறு வேறு சொற்கள்,இது ஒரு பொருட் பல சொல் அணி . .

அடுத்து உள்ள 19-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அன்னப் பறவைகள் நடனம் ஆடும் அகலமான துறை யைக் கொண்ட பொய்கையில் நிரம்பியுள்ள நீரில் படியும் எருமை மாடு முழுக, உதைத்துக்கொண்டு துள்ளி எழும் கருவுறாத வாளை மீன்கள் பாக்கு மரத்தின்மேல்பாய்பவை நிலை பெற்று விளங்கும் ஆகாயத்தின்மேல் தோன்றும் வானவில்லைப் போல விளங்கும். பாடல் வருமாறு: - அன்னம் ஆடும் அகன்துறைப் பொய்கையில்

துன்னும் மேதி படியத் துதைக்தெழும் கன்னி வாளை கமுகின்மேற் பாய்வன மன்னு வான்மிசை வானவில் போலுமால்.” அன்னம்-அன்னப் பறவைகள் ஒருமை பன்மை மயக்கம். ஆடும்-நடனம் ஆடும். அகன்-அகலமான