பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாட்டுச் சிறப்பு 179

சோலைகளின் பக்கங்களில்: ஒருமை பன்மை மயக்கம். எல்லாம்-யாவற்றிலும், கருங்குவள்ை-கருங்குவளைமலர் கள் மலர்ந்து விளங்கும்; ஒருமை பன்மை மயக்கம். வயல்'வயல்கள்: ஒருமை பன்மை மயக்கம். எல்லாம்-முழுவதும், நெருங்கு-நெருங்கியுள்ள. வளை-சங்குப்பூச்சிகள், ஊர்ந்து கொண்டிருக்கும். ஒருமை பன்மை மயக்கம். கேர்டு-மரங் களினுடைய கிளைகள்: ஒரும்ை பன்மை மயக்கம். எல்லாம் -எல்லாவற்றிலும். மட-ம்டப்பத்தை உடைய, அன்னம்அன்னப் பறவைகள் அமர்ந்திருக்கும்; ஒருமை பன்ம்ை மயக்கம்.குளம்-குளங்கள்; ஒருமை பன்மைமயக்கம். எல்லாம் -யாவும். கடல்-சமுத்திரங்கை ள, ஒருமை Liairgיip மயக்கம். அன்ன-போல விளங்கும். நாடு-வேறு நாடுகள்; ஒருடிை பன்மை மயக்கம். எல்லாம்-யாவும். நீர்-நீர்வளத்தைப் பெற்ற நாடுதனை-சோழ நாட்டை. தன்-அசை நிலை. நலம்-நலங்கள்: ஒருமை பன்மை மயக்கம். எல்லாம்-- யாவற்றிலும். ஒவ்வா-ஒத்து இரா. - - பிறகு உள்ள 18-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

கரும்பு ஆலையில் கருப்பஞ்சாற்றைக் காய்ச்சுபவர் கள் பாய்ந்து வரும் போது முழங்கும் முழக்கமும்,சோலையில் வண்டுகள் மலர்களை மொய்த்து ஒலியை எழுப்பி அந்த மலர்களிலிருந்து மேலே எழுந்து பறக்கும் ஒசையும், உலகத் தில் சிறந்து ஓங்கி உள்ள இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங் களையும் முறைப்படி அத்தியயனம் செய்து நிறைவேற்றிய வேதியர்கள் ஒதும் வேதகானமும், சமுத்திரத்தில் அலைகள் உண்ட்ாக்கும் ஓசையை விட மிகுதியாகிப்பரவிக் கேட்கும்.”

பாடல் வருமாறு: *。

"ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஒலமும்

சோலை வாய்வண் டிர்ைத்தெழு சும்மையும் ஞாலம் ஓங்கியங்ான்மறை ஒதையும் வேலை ஓசையின் மிக்கு விரவுமால்.