பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 - பெரிய் புராண்ட்விளக்கம்

பன்மை மயக்கம். சிறு-சிறிய, மகளிர்-பெண் குழந்தை கள். விளையாட்டு-விளையாடும் பல வகையான விளை யாடல்கள்; ஒருமை பன்மை மயக்கம். அந்த விளையாடல் கள் ஆவன: பாண்டி ஆடுதல், கல்லாங்காய் விளையாடு தல், நொண்டி விளையாட்டு முதலியவை. வரம்பு-வயல் களில் உள்ள வரப்புக்கள்; ஒருமை பன்மை மயக்கம்.எல்லாம் -எல்லாவற்றிலும் காணப்படும்.

பின்பு உள்ள 17-ஆம் பாடலின் கருத்து வருமாறு: காடுகள் எல்லாவற்றிலும் தடிகளைக் கொண்ட கரும் புச் செடிகள் வளர்ந்து ஓங்கி நிற்கும்; சோலைகள் எல்லா வற்றிலும் தழைகளோடு கூடிய அரும்புகள் இருக்கும்; அந்தச் சோலைகளினுடைய பக்கங்கள் எல்லாவற்றிலும் கருங்குவளை மலர்கள் மலர்ந்து விளங்கும்; வயல்கள் எல்லாவற்றிலும் நெருங்கிச் சங்குப் பூச்சிகள் ஊர்ந்து கொண்டிருக்கும்; மரங்களின் கிளைகள் அனைத்திலும் மடப்பத்தைப் பெற்ற அன்னப் பறவைகள் அமர்ந்திருக்கும், குளங்கள் யாவும் சமுத்திரங்களைப் போல விளங்கும்; வேறு நாடுகள் யாவும் நீர்வளத்தைப்பெற்ற சோழ நாட்டை நலங்கள் எல்லாவற்றிலும் ஒத்து இரா. பாடல் வருமாறு: . காடெல்லாம் கழைக்கரும்புகாவெல்லாம் குழைக்கரும்பு,

மாடெல்லாம் கருங்குவளை, வயலெல்லாம் நெருங்குவளை, கோடெல்லாம் மடஅன்னம், குளமெல்லாம் கடல்அன்ன; நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வாகலம்எல்லாம்.'

காடு-காடுகள்; ஒருமை பன்மை மயக்கம். எல்லாம்எல்லாவற்றிலும். கழை-தடிகளைக் கொண்ட ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி, கரும்பு-கரும்புச் செடிகள் வளர்ந்து ஓங்கி நிற்கும்; ஒருமை பன்மை மயக்கம். காசோலைகள்: ஒருமை பன்மை மயக்கம். எல்லாம்-அனைத் திலும். குழைக்கு-தளிர்களோடு சூடிய, ஒருமை பன்மை மயக்கம். தளிர்-முற்றாத இலை. அரும்பு-ம்ொட்டுக்கள் "ாணப்படும்; ஒருமை பன்மை மயக்கம். மாடு-அந்தச்