பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 பெரிய புராண விளக்கம்

"கள்வி னிற்பயிலும்கனி வண்டினம்

வாவி யிற்படிக் துண்ணும் மலர்மது

மேவி அத்தடம் மீதெழப் பாய்கயல்

- தாவி அப்பொழி லிற்கணி சாடுமால்.’

காவினில்-பூஞ்சோலையில். பயிலும்-பழகிப் பறக்கும். வண்டு-வண்டுக்ளினுடைய ஒருமை பன்மை மயக்கம். இனம்-கூட்டம். வாவியில்-வாவியில் நிரம்பியிருக்கும் நீரில் இட ஆகு பெயர். படிந்து உண்ணும்-படிந்து குடிக்கும். மலர்-அந்த நீரில் மலர்ந்திருக்கும் செந்தாமரை மலர், வ்ெண்ட்ாமரை மலர், அல்லி மலர், ஆம்பல் மலர், கருங்குவளை மலர், செங்குவளை மலர், குமுத மலர் முதலிய நீர்ப்பூக்களில் நிரம்பியிருக்கும். மலர் : ஒருமை பன்மை மயக்கம். மது-தேனை. மேவி-அடைந்து அதைக் குடித்துவிட்டு. தடம்-அந்தத் தடாகத்தின். மீது-மேலே. எழ-எழுந்து பறக்க: ப்:சந்தி. டாய்-துள்ளிப் பாயும். கயல்-கியல்மீன்கள், ஒருமை பன்மை மயக்கம். தாவிதாவிப் போய். அப் பொழிலில்-அந்தச் சோலையில் வளர்ந்து நிற்கும் பலவகையான மரங்களிற் பழுத்த இட ஆகு பெயர். அந்த மரங்களாவன: மாமரம், தென்ன மரம், பலாமரம், வாழை மரங்கள், வில்வ மரம், விளாமரம் முதலியவை. கனி-பழங்களை ஒருமை பன்மை மயக்கம். சாடும்-அடித்து உதிரச் செய்யும். ஆல்:ஈற்றசை நிலை.

பிறகு வரும் 21-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: சாலி நெற்பயிர்கள் வளரும் நீண்ட வயலில் ஓங்கி வளர்ந்து தங்களுக்கு வேறு எந்தப் பயிரும் ஒப்பு இல்லாமல் மிகுதியாக விளங்கித் தூயதாகிய வெள்ளை நிறத்தைக் கொண்ட உண்மையாக இருக்கும் கருவை உடைமையால் உண்டாகும். வளப்பத்தைப் பெற்றவையாகிக் கருப்பம் முதிருவதற்கு அடையாளமாகிய பச்சை நிறத்தைப் பெற்றுப் பூட்டையின் சுருள்களை விரியச் செய்து ஹர்னாகிய சிவ பெருமானுடைய பக்தர்களுடைய மகிழ்ச்சியை அடைந்து