பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 92 பெரிய புராண விளக்கம்

கரும்பு-வெட்டிய கரும்புத்தடிகளை; ஒருமை பன்மை மியக்கம். அடு-வெல்லங்களாகக் காய்ச்சும். களமர்-ஏர்க் களத்தில் பணிகளைப் புரியும் வேலைக்காரர்கள்: ஒருமை பன்மை மயக்கம். ஆலை-கருப்பூங்கழிகளை இட்டுச் சாறு வடிக்கும் ஆலையில். க், சந்தி. கமழ்-கமழும். நறும் புகையோ-நறுமணம் கொண்ட புகையோ. மாதர்' விருப்பம் மருவிய பெண்மணிகள்: ஒருமை பன்மை மயக்கம். கரும்பு-வண்டுகள்: ஒருமை பன்மை மயக்கம். எழ-மேலே எழுந்து பறக்குமாறு. அகிலால்-தாங்கள் நீராடிய பிறகு தங்களுடைய கூந்தல்களைப் புலர்த்துவதற்காக அகிற் கட்டைகளை: உருபுமயக்கம்; ஒருமை பன்மை மயக்கம். இட்ட-கணப்பில் உள்ள நெருப்பில்இட்டதனால் உண்டான. தூபமோ-புகையோ. யூப-துணை நட்டிருக்கும். வேள்வியாகத்தை வேதியர்கள் புரியும். ப்: சந்தி. பெரும்-பெரு மையைப் பெற்ற பெயர்-புகழை அடைந்த, ச்: சந்தி. சாலை-யாகசாலை. தோறும்-ஒவ்வொன்றிலும். பிறங்கிய புகையோ-விளங்கிய புகையோ. வானின்-ஆகாயத்தில். வரும்-மிதந்து வரும். கரு-கருமையான. முகிலோ-மேகங் களோ, ஒருமை பன்மை மயக்கம்.(இவை யாவும்.)மாடமும்மாடங்களும்; ஒருமை பன்மை மயக்கம். காவும்-பூஞ் சோலைகளும்; ஒருமை பன்மை மயக்கம். எங்கும்-ஆகிய எந்த இடங்களிலும்: ஒருமை பண்மை மயக்கம் சூழ்வ-சுற்றி விளங்கும். பெயர்-புகழ்: அரும்பெறன் மரபிற் பெரும் பெயர் முருக. (269) என்று திருமுருகாற்றுப்படையிலும், பெரும்பெயர் இயவுள்.’’ (274) என்று அதே நூலிலும், பெரும்பெயர் முருக. (பரிப்ாடல், 5:50), பெரும் பெயர் வேந்தன். (புறப்பொருள் வெண்பாமாலை.), பெரும் பெயர்ப் பிரமன்.' (சீவகசிந்தாமணி, 201), பெரும் பெயர்க் கட்வுளிற் கண்டு.' (சிவஞானபோதம், சிறப்புப் பாயிரம்) என்று வருவனவற்றைக் காண்க.

பின்பு உள்ள 28-ஆம் பாடலின் கருத்து வருமாறு: