பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாட்டுச் சிறப்பு 193

எல்லா இடங்களிலும் பல வகை வாழை மரங்களும், செருந்தி மரமும், நறுமணம் கமழும் நாரத்தை மரமும் வளர்ந்து நிற்கும்; இடங்கள் எல்லாவற்றிலும் பூவாமல் காய்க்கும் பலாமரங்கள் முதலியவையும், சால மரமும், தமால மரமும், குளிர்ச்சியைப் பெற்ற மலர்கள் மலரும் குரா மரமும் உயரமாக வளர்ந்து விளங்கும்; வேறு இடங்கள் முழுவதிலும் கருமையான அடியைக் கொண்ட பனமரமும், சந்தன மரமும், குளிர்ச்சியை உடைய மலர்கள் மலரும் சுர புன்னை மரமும் காணப்படும்; மற்ற இடங்கள் யாவற்றிலும் நீளமான இலைகளைப் பெற்ற வஞ்சி மரமும், காஞ்சி மரமும், நிறைந்த மலர்கள் மலர்ந்திருக்கும் கோங்கிலவ மரமும் வளர்ந்து விளங்கும். பாடல் வருமாறு:

நாளிகே ரம்செருந்தி நறுமலர் கரந்தம் எங்கும்; கோளிசா லம்த மாலம் குளிர்மலர்க் குரவம் எங்கும்; தாளிரும் போந்து சந்து தண்மலர் காகம் எங்கும்; நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்கம் எங்கும்.' நாளிகேரம்-செவ்வாழை மரம், கருவாழை மரம், பச்சை நாடன் வாழை மரம், மொந்தன் வாழை மரம், சுகந்தன் வாழை மரம்,பேயன் வாழை மரம் முதலிய பல வகை வாழை மரங்களும்; ஒருமைபன்மை மயக்கம். செருந்தி-பொன்னைப் போன்ற ம ல ர் க ள் மலரும் செருந்தி மரமும்; செருந்தி செம்பொன் மலரும் சோலை’’ என்று சுந்தரமூர்த்தி நாயனார் பாடியருளியதைக் காண்க. நறு-நறுமணம் கமழும். மலர்-மலர்கள் மலர்ந்திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். நரந்தம்-நாரத்தை மரமும். எங்கும்-எந்த இடத்திலும் காணப்படும். கோளி-பூவாதே காய்க்கும் பலாமரம் முதலிய மரங்களும்; ஒருமை பன்மை மயக்கம். சாலம்-சால மரமும். தமாலம்-தமால மரமும்: குளிர்-குளிர்ச்சியைக் கொண்ட மலர்-மலர்கள் மலரும்; ஒருமை பன்மை மயக்கம். க்: சந்தி. குரவம்-குராமரமும்,

பெ-13