பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாட்டுச் சிறப்பு - 197.

கட்டிய மாலைகளைத் தொங்கவிட்ட ஒருமை பன்மை மயக்கம்; ஆகுபெயர். ப்: சந்தி. பந்தர்-பந்தல்கள்; ஒருமை பன்மை மயக்கம். எங்கும்-எங்கனும் திகழும். செம்-சிவந்த நிறத்தைப் பெற்ற.கயல்-கயல்மீன்கள்: ஒருமை பன்மை மயக்கம். பழனம்-வயல்கள்: ஒருமை பன்மை மயக் கம். எங்கும்-எங்கணும்துள்ளிக் குதிக்கும்.திருமகள்-இலக்குமி தேவி. உறையுள்-நிலைபெற்றுத் தங்கும் செல்வம் படைத்த மாளிகைகள்; ஒருமை பன்மை மயக்கம். எங்கும்-எந்த இடத் திலும் உயர்ந்து விளங்கும். - • -

பெண்மணிகளின் வாய்மொழிகளுக்குப் பண்கள் உவமை: பண்ணி னேர்மொழி மங்கைமார்.’’, பண்ணி லாவிய மொழியுமை.', 'பண்ணியா முனமுரலும் பணிமொழி உமை.", பண்ணி யன்றெழுமென் மொழி யாள். , ' பண்ணினேர் மொழியானையோர் பாகனார்.’’, பண்தடவு சொல்லின் மலைவல்லி உமை.’’, பண்ண மரும் மென்மொழியினார்.’’, பண்டலை மழலை செய்யா மென் மொழிஉமை.", பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி.’’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாய னாரும், பண்தனை வென்ற இன்சொற் பாவையோர் பங்கா. , பண்ணின் இன்மொழி யாளை.',"பண்தொத்த மொழியாளை. பண்ணினேர் மொழியாள் உமை பங்கரோ.', 'பண்ணினேர் மொழியாள்.', 'பண்மலிந்த மொழியவரும்.’’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், :பண்ணார் மொழிப் பாவையர். , பண்ணேர் மொழி யாளை ஒர் பங்குடையாய்.’’, 'பண்மயத்த மொழிப் பரவை. , ' பண்ணின் நேர்மொழி மங்கை பங்கினன்.’’, "பண்ணியல் மென்மொழியார்’ என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், பண்ணினேர்,மொழியாள் பங்க்.', 'பண் னார்ந்த மொழிமங்கை பங்கா.' என்று மாணிக்க வாச கரும் பாடி யருளியவற்றைக் காண்க. -

பின்பு உள்ள 31-ஆம் பாடலின் கருத்து வருமாறு: