பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#98 பெரிய புராண விளக்கம்

எந்த இடங்களிலும் மேகங்களும் ஆண் யானைகளும் காணப்படும்; வேறு எந்த இடங்களிலும் இருக்கு வேதம்: யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் ஒதும் வேதபாரர்களின் வேதகானம் கேட்கும்; பல இடங்களில் வேத பாடசாலைகள் விளங்கும்; வேறு எல்லா இடங்களிலும் வேள்வி, உபநயனம்; திருமணம்,பும்ஸ்வன சீமந்த முஆர்த்தம்,சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலிய சடங்குகள் நடைபெறும்; யோகம் புரிபவர்களும் தலத்தை ஆற்றுபவர்களும் எந்த இடங்களிலும் இருப்பார்கள்; எந்த இடங்களிலும் ஊஞ்சல்களும் தெருக் களும் பொலிவு பெற்று விளங்கும்; வேறு எந்த இடங்களிலும் சிற்றின்பத்தை நுகர்பவர்களும் மகிழ்ச்சியை அடையவர் களும் தோற்றப் பொலிவோடு விளங்குபவர்களும் காட்சி அளிப்பார்கள்; மற்ற இடங்களில் எல்லாம் புண்ணியச் செயல்களைப் புரிந்த முனிவர்கள் இருப்பார்கள். பாடல் வருமாறு: ".

ம்ேகமும் களிறும் எங்கும்; வேதமும் கிடையும் எங்கும்;

யாகமும் சடங்கும் எங்கும்; இன்பமும் மகிழ்வும் எங்கும்; யோகமும் தவமும் எங்கும், ஊசலும் மறுகும் எங்கும், போகமும் பொலிவும் எங்கும்; புண்ணிய முனிவர் எங்கும்" மேகமும்-மேகங்களும், ஒருமை பன்ம்ை மயக்கம். க்ளிறும்-அவற்ற்ைப் போலத் தோன்றும் ஆண் யானை களும் ஒருமை பன்ம்ை மயக்கம். எங்கும்-எவ்விடங்களிலும் காணப்படும்; ஒருமை பன்மை மயக்கம். வேதமும்-இருக்கு வேதம், யஜூர் வேத்ம், சர்ம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் ஒதும் வேத பாரக்ர்களின் வேத கான்ம் கேட்கும். வேதம்: ஒருமை பன்மை மயக்கம்: திணைமயக்கம்.கிடையும்-பிரமசாரிகள் வேதங்களை அத்தி பயண்ம் செய்யும் வேத பாடசாலைகள் விளங்கும்; ஒருமை பன்மை மயக்கம். எங்கும்-இன்வ் எவ்விடத்திலும் இருக்கும். யாகமும்-வேள்வி புரிபவர்களும்; திண்ை மயக்கம். சடங்கும்"