பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பெரிய புராண விளக்கம்

களைப் பெற்ற பெண்மணிகள் எந்த இடங்களிலும் உலாவு வார்கள்; வேறு எந்த இடங்களிலும் வளருகின்ற சங்கீதத்தை எழுப்பும் புல்லாங் குழல்களை அவற்றை வைத்திருப்பவர்கள் ஊதிக் கொண்டிருப்பார்கள்; சிவபெருமானுடைய தொண் டர்கள் வாழும் திருமாளிகைகள் எந்த இடங்களிலும் உயர்ந்து நிற்கும்; மக்கள் தங்கள் வீடுகளுக்கு வரும் விருந்: தாளிகளைப் பார்த்துக் சூறும் வார்த்தைகளாகிய, இந்த வீட்டில் தங்கியிருப்பீர்களர்க. என்பவை கேட்கும்; சோலை. களில் பலா மரங்களும் எந்த இடங்களிலும் வளர்ந்து நிற்கும்: பல ஆத்தி மரங்களும் எந்த இடங்களிலும் உயர்ந்து விளங் கும்.” -

பாடல் வருமாறு: х "பண்டரு விபஞ்சி எங்கும், பாதசெம் பஞ்சிளங்கும்;

வண்டறை குழல்கள் எங்கும்; வளரிசைக் குழல்கள் எங்கும்; தொண்டர்தம்இருக்கை எங்கும்;சொல்லுவ திருக்கை எங்கும் தண்டலை பலவும் எங்கும்; தாதகி பலவும் எங்கும்.'

பண்-பலவகையாகிய பண்களை ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: நட்ட பாடை, குறிஞ்சி, தக்க ராகம், இந்தளம், கெளசிகம், கொல்லி, பியந்தைக் காந் தாரம், பழம் பஞ்சுரம், சீகாமரம், தக்கேசி, காந்தாரம், காந்தார பஞ்சமம், அந்தாளிக் குறிஞ்சி, பஞ்சமம், வியாழக் குறிஞ்சி, செவ்வழி, சாதாரி, பழந்தக்கராகம், நட்டராகம், மேகராகக் குறிஞ்சி, புறநீர்மை, யாழ்.மூரி, கொல்லிக் கெளவாணம், செந்துருத்தி முதலியவை. தரு-எழுப்பும். விபஞ்சி-குறிஞ்சி நிலத்துக்குரிய யாழை மீட்டி வாசிப்பவர் கள்; திணைமயக்கம். எங்கும்-எந்த இடங்களிலும் அந்த யாழை வாசித்துக் கொண்டிருப்பார்கள்; ஒருமை பன்மை மயக்கம். பாத-பெண்மணிகள் தங்களுடைய பாதங்களில்: ஒருமை பன்மை மயக்கம். செம்பஞ்சி-செம்பஞ்சுக் குழம்பை. எங்கும்-பூசிக் கொண்டு எந்த இடங்களிலும் விளங்குவார் கள் ஒருமை பன்மை மயக்கம். வண்டு-வண்டுகள்: ஒருமை பன்மை மயக்கம். அறை-ரீங்காரம் புரியும். குழல்கள்