பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாட்டுச் சிறப்பு 203.

கூந்தல்களைப் பெற்ற பெண்மணிகள்; திணை மயக்கம். எங்கும்-எந்த இடங்களிலும் உலாவிக் கொண்டிருப்பார்கள்; ஒருமை பன்மை மயக்கம். வளர்-வளரும். இசை-சங்கீ தத்தை எழுப்பும். க்: சந்தி. குழல்கள்-புல்லாங்குழல் களை அவற்றை வைத்திருப்பவர்கள்; திணைமயக்கம், எங்கும். எல்லா இடங்களிலும் அவற்றை ஊதிக் கொண்டிருப் பார்கள்; ஒருமை பன்மை மயக்கம். தொண்டர்தம்-சிவ பெருமானுடைய தொண்டர்கள் வாழும்; ஒருமை பன்மை மயக்கம், தம்: அசைநிலை. இருக்கை-திருமாளிகைகள்; ஒருமை பன்மை மயக்கம். எங்கும்-எந்த இடங்களிலும் உயர்ந்து நிற்கும்; ஒருமை பன்மை மயக்கம். சொல்லுவதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு வரும் விருந்தாளிகளை வர வேற்றுச் சொல்லும் வார்த்தைகள்; ஒருமை பன்மை மயக்கம். இருக்கை-இந்த வீட்டில் தங்கி யிருப்பீர்களாக என்பவை. எங்கும்-எந்த இடங்களிலும் காதுகளில் விழும்; ஒருமை பன்மை மயக்கம். தண்டலை-பூஞ்சோலையில். பலவும்பலாமரங்களும்; ஒருமை பன்மை மயக்கம். எங்கும்-எந்த இடங்களிலும் வளர்ந்து நிற்கும்; ஒருமை பன்மை மயக்கம். தாதசி.ஆத்தி மரங்கள்; ஒருமை பன்மை மயக்கம்.பலவும்-பல. மரங்களும். எங்கும்-எந்த இடங்களிலும் தழைத்து ஓங்கி வளரும்; ஒருமை பன்மை மயக்கம். . -

பெண்மணிகள் தங்கள் பாதங்களில் செம்பஞ்சுக் குழம்பைப் பூசிக் கொள்ளுதல்: 'பஞ்சின் மெல்லடிப்

பாவை., 'பஞ்சின் மெல்லடி யாளுமை பங்க. 'பஞ். சுண்ட மெல்லடியாள் பங்கன்.’’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், பஞ்சின் மெல்லடிப் பாவைமார்.’’, 'பஞ்சிச் சீறடி யாளை., 'பஞ்சேறும் மெல்லடி யாளை' என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், 'பஞ்சே ரடியாள் பாகத் தொருவா.', 'பஞ்சின் மெல்லடியாள் பங்க. , 'பஞ்சாய அடிமடவார்.’’, 'பஞ்சாய அடிமட.

லார் கடைக்கண்ணால்’’ என்று மாணிக்கவாசகரும்,