பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 பெரிய புராண விளக்கம்

பஞ்சின் மெல்லடியாள் பாகன்' என்று கம்பரும் பாடி யருளியவற்றைக் காண்க. -

பிறகு உள்ள 33-ஆம் கவியின் கருத்து வருமாறு: எந்த இடங்களிலும் காலை நேரத்தில் மேயப்போன பசு மாடுகள் திரும்பி மாலை வேளையில் வரும் வீடுகள் இருக் கும்; வண்டுகள் தேனைக் குடிப்பதற்காகச் சென்று மொய்க் கும் பல வகையான மலர்களாகிய இடங்கள் எவ்விடங்களி லும் விளங்கும்; பெண்மணிகள் பாடி ஆடும் அம்மனைகளின் பாடல் எந்த இடங்களிலும் கேட்கும்; அந்தப் பெண்மணிகள் பழகி விளையாடும் அத்தகைய வீடுகள் எந்த இடங்களிலும் காட்சி அளிக்கும்; உயரமாகக் கட்டியிருக்கும் கொடிகளை எந்த இடங்களிலும் பார்க்கலாம்; பணத்தைச் சேமித்து வைத்திருக்கும் கருவூலங்களையுடைய செல்வர்கள் வாழும் மாளிகைகள் எந்த இடங்களிலும் சிறப்புற்று விளங்கும்; இதழ்களை உடைய மலர்களைக் கட்டிய மாலைகளை அணிந்து கொண்ட ஆடவர்களும் பெண்மணிகளும் எந்த இடங்களிலும் உலாவிக் கொண்டிருப்பார்கள்; திருமணம் ஆன பெண்மணிகள் தங்களுடைய துணைவர்களாகிய கண வர்களைச் சுற்றிக் கொண்டு நிற்கும் வரிசை எந்த இடங்களி லும் காணப்படும். பாடல் வருமாறு:

'மாடுபோ தகங்கள் எங்கும்;

வண்டுபோ தகங்கள் எங்கும்; பாடும்.அம் மனைகள் எங்கும்;

பயிலும்.அம் மனைகள் எங்கும்; டுேகே தனங்கள் எங்கும்;

நிதிகிகே தனங்கள் எங்கும்; தோடுசூழ் மாலை எங்கும்:

துணைவர்சூழ் மாலை எங்கும்.” மாடு-க்ாலை நேரத்தில் மேயப்போய் மாலை வேள்ையில் யசு மாடுகளும் எருமை மாடுகளும்:ஒருமை பன்ன்ம மயக்கம்.