பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாட்டுச் சிறப்பு 203

போது-திரும்பி வரும். அகங்கள்-வீடுகள். எங்கும்எந்த இடங்களிலும் நிலவும்; ஒருமை பன்மை மயக்கம். வண்டு-வண்டுகள் தேனைக் குடிப்பதற்காக, ஒருமை பன்மை மயக்கம். போது-பறந்து சென்று மொய்க்கும் பல வகையான மலர்களாகிய, ஒருமை பன்மை மயக்கம். அகங் கள்-இடங்கள். எங்கும்-எந்த இடங்களிலும் இருக்கும். அந்த மலர்களாவன: செந்தாமரை மலர், வெண்டாமரை மலர், அல்லி மலர், ஆம்பல் மலர், குமுத மலர், நீலோற்பல மலர், சண்பக மலர், மகிழ மலர், பூவரச மலர், மல்லிகை மலர், முல்லை மலர், இருவாட்சி மலர், வேங்கை மலர், வாகை மலர், செம்பருத்தி மலர், வில்வ மலர், விளா மலர், செங்கழுநீர் மலர் முதலியவை. பாடும்-பெண்மணிகள் அம்மானைக் காய்களை எறிந்து விளையாடும்போது பாடும். அம்மன்ைகள்-அம்மானைப் பாடல்கள். எங்கும்-எந்த இடங்களிலும் காதில் விழும்; ஒருமை பன்மை மயக்கம். பயிலும்-அந்தப் பெண்மணிகள் விளையாடிப் பழகும். அம்அழகிய மனைகள்-வீடுகள். எங்கும்-எந்த இடங்களிலும் இருக்கக் காணலாம்; ஒருமை பன்மை மயக்கம். நீடு-உயர மாகக் கட்டிய கேதனங்கள்-துவசங்கள். எங்கும்-எந்த இடங்களிலும் பறந்து கொண்டிருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். நிதி-செல்வத்தைச் சேமித்திருக்கும். நிகேதனங் கள்-கருவூலங்கள். எங்கும்-செல்வர்கள் வாழும் எந்த மாளிகையிலும் இருக்கும். தோடு-இதழ்கள் மலர்ந்த: ஒருமை பன்மை மயக்கம். சூழ்-மலர்களைச் சுற்றிக் கட்டிய. மாலை-மாலைகளை அணிந்த ஆடவர்களும் பெண்மணிகளும்; திணை மயக்கம் மாலை; ஒருமை பன்மை மயக்கம். எங்கும்-எந்த இடங்களிலும் உலவிக் கொண்டிருப்பார்கள்; ஒருமை பன்மை மயக்கம். துணைவர்திருமணமான பெண்ம்னிகள் தங்களுடைய வாழ்க்கைத் துணைவர்களாகிய கணவர்களை ஒருமை பன்மை மயக்கம். சூழ்-சுற்றிக்கொண்டு நிற்கும். மாலை-வரிசை. எங்கும்எந்த இடங்களிலும் காட்சி அளிக்கும். .