பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 பெரிய புராண விளக்கம்

மாடுகள் மேய்ந்துவிட்டு மாலையில் தாங்கள் உள்ள வீடு களுக்குத் திரும்பி வருதல்: சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின், உறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகள், நடுங்குசுவல் அசைத்த கையன் கைய, கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர, இன்னே வருகுலர் தாயர் என்போன். (12-7) என்று முல்லைப் பாட்டில் வருவதைக் காண்க.

பெண்மணிகள் அம்மானை ஆடுதல்: "பந்தொடம் மானை முற்றில் கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள்’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய தைக் காண்க. திருவாசகத்தில் திரு அம்மானை என்ற பகுதி இருக்கிறது. அதில் பெண்மணிகள் அம்மானை ஆடிக் காண்டே பாடுவதாக அமைந்த பாடல்கள் இருபது உள்ளன. பெண்பாற் பிள்ளைத் தமிழ் நூல்களில் அம்மா னைப் புருவம் என்ற ஒரு பகுதி உண்டு. அதில் பெண்கள் பாடிக்கொண்டு அம்மானைக் காய்களை ஆடுவதாக வரும். ஒர் எடுத்துக்காட்டு வருமாறு: இது திருவாவடுதுறை ஆதீன மகாவித்துவானாக விளங்கிய மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாடிய திருவெண்ணிற்றுமை பிள்ளைத்தமிழில் வரும் ஒரு பாடல்.

சொல்லூர் வயத்த சிவலோகத்

தியாகர்தம் தோட்டுனை குழைத்த நாளும்

தோலா தெழுந்தகின் துனைமுலைக் குவடுநேர்

தோற்றியெழு தோற்றம் நோக்கி - வில்லூர் நெடுஞ்சிகர மேருவென் றுரைசெய்வட

வேதண்ட முற்ற கொற்ற

வீறுமுற் றும்தபப் பொடிசெய்து கடிசெய்து, . மேவுபலு ருண்டை ஆக்கி

எல்லூர் மணிக்கங்க ணக்கரத் தேந்திமேல்

எறிவது கடுப்ப வறமுற்

றேறுமங் கைத்தலத் துறுசிவப் பேறுவதை,

எண்ணாது விண்ணாடளாம்