பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாட்டுச் சிறப்பு 205

மல்லூர் பொழிற்பெரு மணத்தமர் பராபரைபொன்

அம்மானை ஆடியருளே

அருளின்எம் குடிமுழுதும் அடிமைகொண்

டருளும்உமை அம்மானை ஆடியருளே.’’ பிறகு வரும் 34-ஆம் பாடலின் கருத்து வருமாறு: சோழ நாட்டில் உள்ள ஊர்களில் இருக்கும் வீதிகளில் விழாவினுடைய ஆரவாரமும், வீடுகளில் விரும்பி வந்தவர் களுக்குப் படைக்கும் விருந்துணவை உண்ணும்போது அவர்கள் சொல்லும் வார்த்தைகளின் பேரொலியும் கேட் கும்; அந்தணர், சுத்திரியர், வைசியர், வேளாளர், பள்ளர், பள்ளிகள், பறையர், பறைச்சிகள், சக்கிலியர், சக்கிலிச்சிகள் முதலிய சாதிகளிற் பிறந்தவர்கள் தங்கன் தங்களுக்குரிய தரும வழிகளிலிருந்து தவறி நடக்க மாட்டார் கன்; புதல்வர்களும் தங்களுடைய வீடுகளில் தவறான செயல்களைச் செய்ய மாட்டார்கள்; பல வகையான பறவை களும், பலவிதமான விலங்கினங்களும் தங்களுடைய நெறி முறைகளில் ஒழுகிவரும்; திருமகள் கூட அந்த நாட்டில் நிலையாக இருந்து வாழ்வதை எண்ணிக்கொண்டிருப்பாள்; சிவ பக்தர்கள் உச்சரித்த நமசிவாய என்ற ஐந்து எழுத்துக் கள் அடங்கிய பஞ்சாட்சரத்தையும் அவர்கள் உச்சரிப்பதால் அவர்களிடம் வரும் நோய்கள் வருவதற்குப் பயத்தை அடையும்." பாடல் வருமாறு: * வீதிகள் விழவின் ஆர்ப்பும், விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும்,

சாதிகள் நெறியில் தப்பா; தனயரும் மனையில் தப்பா: ரீதிய புள்ளும் மாவும்; நிலத்திருப் புள்ளும் மாவும்: ஒதிய எழுத்தாம் அஞ்சும் உறுபிணி வரத்தாம் அஞ்சும்.’’

வீதிகள்-அந்தச் சோழநாட்டில் விளங்கும் தலங்களில் இருக்கும் தெருக்களில். விழவின்-திருத்தேர் விழா முதலிய விழாக்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். ஆர்ப்பும்முழக்கமும் கேட்கும். விரும்பினர்-தங்களுடைய வீடுகளுக்கு விரும்பி வந்தவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். விருந்தின்