பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 பெரிய புராண விளக்கம்

உண்னும் விருந்தின்போது. ஆர்ப்பும்-பேசும் ஆரவார ஒலியும் கேட்கும். சாதிகள்-அந்தணர், சுத்திரியர், வைசி யர், வேளாளர், பள்ளர், பள்ளிகள், பறையர், பறைச்சிகள்: சக்கிலியர், சக்கிலிச்சிகள் என்னும் சாதிகளில் பிறந்தவர்கள்: திணை மயக்கம். நெறியில்-தங்கள் தங்களுக்கு உரிய கடமைகளின் வழிகளிலிருந்து: ஒருமை பன்மை மயக்கம். தப்பிா-தவறி நடக்கமாட்டார்கள்: திணைமயக்கம். தனயரும்-புதல்வர்களும் ஒருமை பன்மை மயக்கம். மனை யில்-தாங்கள் வாழும் வீடுகளில் தங்களுடைய பெற்றோர் கள் கூறும் வார்த்தைகளிலிருந்து:மனையில்: ஒருமை பன்மை மயக்கம்.தப்பர்-தவறி நடக்கமாட்டார்கள்: திணை மயக்கம். புள்ளும்-பலவகையான பறவைகளும்: ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: பருந்து, கருடன், கழுகு, குருவி,

காகம், சிட்டுக்குருவி, தூக்கணாங் குருவி, நாகணவாய்ப்புள், மீன்கொத்திப்பறவை, புறா, தூதுணம்புறா, குயில் முதலி யவை. மாவும்.பல வகையான விலங்குகளும்; ஒருமை பன்மை மயக்கம். அவை யாவன: சிங்கம், யானை, புலி, வேங்கை, சிறுத்தை, ஒட்டகம், பசுமாடு, எருமைமாடு, நாய், கரடி முதலியவை. நீதிய-தங்களுடைய நெறி முறைப்படி நடந்து யாருக்கும் துன்பங்களைச் செய்யா. 'காட்டு மாவும் உறுகண் செய்யா. (பெரும்பாணாற்றுப்படை, 43) என்று வருவதைக் காண்க. மாவும்-திருமகளும். நிலத்து-இந்த நாட்டில். இருப்பு-நிலையாகத் தங்கியிருப்பதை. உள்ளும்

எண்ணி அவ்வாறே இருப்பாள். ஒதிய-சிவபக்தர்கள் உச்ச

ரித்த எழுத்து-எழுத்துக்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

ஆம்-ஆகும். அஞ்சும்-ந, ம, சி, வா, ய என்னும் பஞ்சாட்

சரமும். உறு பிணி தங்களை உச்சரித்தவர்களுக்கு வரும்

நோய்கள்; ஒருமை பன்மை மயக்கம், வரத்தாம்-வருவதற்

குத் தாங்கள். அஞ்சும்-பயப்படும். 'இயம்புவராயிடின்,

எல்லாத் தீங்கையும்,நீங்குவர் என்பரால், நல்லார் நாமம் நமச்சிவாயவே. என்று வருவதைக் 76ನೇಕ.