பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 பெரிய புராண விளக்கம்

மையில்-பழமையால் உருபு மயக்கம். மிக்கது-மிக்க சிறப் பைக் கொண்டத்ாக விளங்குவது. மன்னு-நிலை பெற்ற அழகை உடையவளும்; திணை மயக்கம். மா-பெருமை யைப் பெற்றவளும்; திணை மயக்கம். மலராள்-செந்தா மரை மலரில் வீற்றிருப்பவளும் ஆகிய திருமகள். வழிபட்டதுவழிபட்டுப் பேறு வெற்ற சிவத்தலம். வன்னி-வன்னி பத்தி ரத்தையும். ஆறு-கங்கையாற்றையும். மதி-பிறைச் சந்தி ரனையும். பொதி-தங்க வைத்த செம்-தங்கத்தைப் போலச் சிவந்த, சடை-சடாபாரத்தைப் பெற்ற ச்:சந்தி. சென்னியார்.தலையைக்கொண்ட வன்மீக நாதர். திருவாரூர்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருவாரூர் என்னும். த்:சந்தி. திரு-அழகிய நகர்-பெரிய தலம்.

வன்னி பத்திரத்தைத் தலையில் அணிந்தவர்: வன்னி

கொன்றை...குடும் வலிவலம் மேயவனை,’’, * வன்னி கொன்றை.......சடையிற் பொலிவித்த புராணனார். ', 'வன் னியும் மந்தமும் மதிபொதி சடையினன். , 'வன்னி

கொன்றை.......சென்னிவைத்த பிரான்.’’ என்று திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் பாடியருளியவற்றைக் காண்க.

தங்கத்தைப் போன்ற சடா பாரத்தைப் பெற்றவர். பொன்திரண் டன்ன புரிசடை.', 'பொன்னியன்ற சடை', 'பொன்னி ரபுன்சடையான். ,பொன்தயங்கிலங் கொளிந் நலம் குளிர்ந்த புன்சடை., 'பொன்போலும் சடைமேற் புனல் தாங்கிய புண்ணியனே.’’, ‘பொன்னைப் புரிதரு சடை யினர்.’’ என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும், :பொன்னவில் புன்சடையான்.’’, படர்பொற் சடை யும்.', 'பொன்னன லார்சடைக் கொன்றையினாய்.’’, 'பொன்னக்கன்ன சடை.', 'பொன்னுள் ளத்திரள் புன் சடை.’’, செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலும், செஞ்சடைஎம் பெருமானே., 'பொன்னேர் சடைமுடி யாய்.” என்று திருநாவுக்கரசு நாயனாரும், செம்பொ சேனர் சடையாய் ' என்று சுந்தரமூர்த்தி நாயனாரும்