பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு

பெரிய புராணத்தில் மூன்றாவதாக விளங்குவது திருநக ரச் சிறப்பு. அதில் வரும் முதற் பாடலின் கருத்து வருமாறு:

'இது வரையில் நாம் பாடிய சோழ நாட்டில் பழமையி னால் மிக்க சிறப்பைப் பெற்றதாக விளங்குவது நிலைபெற்ற அழகைக் கொண்டவளும், பெருமையைப் பெற்றவளும், செந்தாமரை மலரில் வீற்றிருப்பவளும் ஆகிய திருமகள் வழி பட்ட சிவத்தலம், வன்னிபத்திரத்தையும், கங்கையாற்றை யும், பிறைச் சந்திரனையும் தங்க வைத்த தம்முடைய சிவந்த சடாபாரத்தைக் கொண்ட திருமுடியை உடையவ ராகிய வன்மீகநாதர் கோயில் கொண்டு எழுந்தருளி இருப்பது திருவாரூர் என்னும் அழகிய நகரம். பாடல் வருமாறு:

'சொன்ன நாட்டிடைத் தொன்மையில் மிக்கது .

மன்னு மாமல ராள்வழி பட்டது வன்னி ஆறு மதிபொதி செஞ்சடைச் சென்னி யார்திரு வாரூர்த் திருநகர்.' - சொன்ன-இது வரையில் நாம் பாடிய. நாம் என்றவர் சேக்கிழார். நாட்டிடைசோழநாட்டில். த்:சந்தி. தொன்

பெ-14