பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 - பெரிய புராண விளக்கம்

தோளால்-தோள்களால்; ஒருமை பன்மை மயக்கம். வையம்-இந்தப் பூமண்டலத்தை. பொது-பிற மன்னர்களுக் கும் பொதுவானது. க்: சந்தி. கடிந்து-என்று கூறுவதைப் போக்கித் தனக்கே உரியதென்று சொல்லுமாறு. இனிதுஇனிமையோடு. காக்கும்-அரசாட்சி புரிந்து பாதுகாக்கும். கொற்றவன்-மன்னனாகிய. அநபாயன்-அநபாயச் சோழ மாமன்னன். பொன்-தங்க மாலைகளைத் தொங்கவிடப் பெற்ற ஒருமை பன்ன்மை மயக்கம். குடை-வெண்கொற்றக் குடையின். நிழல்-நிழலில். குளிர்வது-குளிர்ச்சியை அடை வது. என்றால்-என்று கூறினால். மற்று-வேறாக. அதன்ஆந்த நாட்டினுடைய. பெருமை-பெருமையைப் பெற்ற தன்மை. நம்மால்-சேக்கிழாராகிய எம்மால். வரம்பு உறஓர் எல்லைக்குள் அடங்கும் வண்ணம். விளம்பல்-பாடுதல். ஆமோ-இயலுமோ இயலாது என்பது கருத்து.

பொதுக்கடிந்து காத்தல்: பொதுச்சொற் பொறான்.' (8:2) என்னும் புறநானூற்றில் வரும் சொற்றொடரும், அதற்கு அதன் உரையாசிரியர், பூமி பிற வேந்தருக்கும் பொது என்னும் வார்த்தைக்குப் பொறாது என்று எழுதி யிருப்பதையும், தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன்' (புறநானூறு, 51:5), தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி, வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்.” (ஷ 189 : 1-2), பொதுமொழி, பிறர்க்கின்றி முழுகாளும் செல்வர்க்கு,’’ (கலித்தொகை, 68), 'அரசன் போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறானாய்?’ (நெடுநல்வாடை அவதாரிகை), கொடியும் முரசும் கொற்றவெண் குடையும், பிறர்கொளப் பொறாஅன் தானே கொண்டு. (சிதம்பரமும் மணிக்கோவை, 25) என வருவனவற்றைக் காண்க. -