பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 - பேரிய புராண விளக்கம்

மத்தளத்தின் ஒசையும்-சத்தமும் தே-சங்கீத வித்து வான்கள் தங்கள் வாய்களாற் பாடும் இசைப் பாடல்களி னுடைய, ஒருமை பன்மை மயக்கம். ஒசையுமாய்-இனிய ஒலியுமாக நிறைந்து. க்சந்தி. கிளர்வு-அந்தத் திருவாரூர் என்னும் நகரத்தில் கிளர்ச்சியை. உற்ற-பெற்று விளங்கின. ஏ:ஈற்றசை நிலை.

அடுத்து வரும் 3-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: ‘ t_Jç1) G)J6&),5E; jíTGJT வாத்தியங்களை வாசிக்கும் வாத்தியக் காரர்கள் வாசிக்கப் பரவி அமைந்த இனிய நாதத் தோடு செல்வர்கள் வாழும் வீதியில் செழுமையைப் பெற் றதும் அடிக்கும் மணியைக் கட்டியதும் ஆகிய தேர் ஒடும் போது உண்டாகும் சத்தமும், வளப்பத்தைக் கொண்ட யானை பிளிறும் ஓசையோடு குதிரை கனைக்கும் சத்தமும் ஒரு வரம்பு இல்லாமல் திருவாரூரில் எந்த இடங்களிலும் எழுந்து முழங்கினவையாக இருக்கின்றன. பாடல் வருமாறு:

'பல்லி யங்கள் பரந்த ஒலியுடன்

செல்வ வீதிச் செழுமணித் தேரொலி மல்லல் யானை ஒலியுடன் மாவொலி எல்லை இன்றி எழுந்துள எங்கணும்.' பல்-பல வகையாகிய, இயங்கள்-வாத்தியங்கள். அவை யாவன: நாகசுரம், ஒத்து, கஞ்சதாளம், மத்தளம், வீணை, யாழ், சல்லரி, ஊதுகொம்பு, பேரிகை, முரசம், முகவீணை முதலியவை. பரந்த-அவற்றை வாத்தியக்காரர்கள் வாசிக்கும் பரவி அமைந்த, ஒலியுடன்-இனிய நாதத்தோடு. செல்வ-செல்வம் படைத்தவர்கள்,வாழும்; திணை மயக்கம். வீதி-தெருவில்.ச்:சந்தி, செழு-செழிப்பானதும். மணி-அடிக் கும் மணியைக் கட்டியதும் ஆகிய த்:சந்தி.தேர்-தேர் ஒடும் போது உண்டாகும்; ஆகுபெயர்.ஒலி-சடசட சத்தமும், மல் லல்-வளப்பத்தைக் கொண்ட, யானை-யானை பிளிறும். ஒலி யுடன்-ஓசையோடு. மா-குதிரை. ஒலி-கனைக்கும் சத்தமும்.