பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு - - 213

எல்லை-ஒரு வரம்பு. இன்றி-இல்லாமல். எங்கணும்திருவாரூரில் எந்த இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். எழுந்து-மேல் எழுந்து. உள-இருக்கின்றன; இடைக்குறை.

பின்பு வரும் 4-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

மாடங்கள், மாளிகைகள், மேல் மாடிகள், மண்டபங் கள், கூடங்களைப் பெற்ற சாலைகள், கோபுரங்கள், திண்ணைகள், நீளமான சன்ன்ல்கள்,நெடுங்காலமாக விளங் கும் நடன சபைகள் ஆகிய எந்த இடங்களிலும் நடனமாடும் விருப்பம் மருவிய நடனப் பெண்மணிகள் தங்கள் கால்களில் அணிந்திருக்கும் சிலம்புகள் முழக்கத்தைச் செய்பவைகளாக விளங்கும். பாடல் வருமாறு:

'மாடம் மாளிகை சூளிகை மண்டபம்

கூட சாலைகள் கோபுரம் தெற்றிகள் நீடு சாளரம் டேரங் கெங்கனும் ஆடல்'மாதர் அணி.சிலம் பார்ப்பன.'

மாடம்-மாடங்கள்; ஒருமை பன்மை மயக்கம். மாளிகை. திருமாளிகைகள்; ஒருமை பன்மை மயக்கம். சூளிகை-மேல் மாடிகள்; ஒருமை பன்மை மயக்கம். மண்டபம்-மண் டபங்கள்; ஒருமை பன்மை மயக்கம். கூட-பள்ளிக் கூடங்கள் உள்ள ஒருமை பன்மை மயக்கம். சாலைகள்வீதிகள். கோபுரம்-ஆலயங்களின் முன்னால் உயர்ந்து நிற் கும் கோபுரங்கள்; ஒருமை பன்மை மயக்கம். தெற்றிகள்வீடுகளில் உள்ள திண்ணைகள். நீடு-நீள்மான. சாளரம்சன்னல்கள்; ஒருமை பன்மை மயக்கம். நீடு-நெடுங்கால மாக விளங்கும். அரங்கு-நடனசபைகள் ஆகிய; ஒருமை பன்மை மயக்கம். எங்கணும்-எந்த இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். ஆடல்-நடனம் புரியும். மாதர்-விருப்பம் மருவிய நடனமாடும் பெண்மணிகள்; ஒருமை பன்மை மயக் கம். அணி-தங்கள் கால்களில் அணிந்த, சிலம்பு-சிலம்பு