பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 பெரிய புராண விளக்கம்

கள்; ஒருமை பன்மை மயக்கம். ஆர்ப்பன-முழக்கத்தைச் செய்பவைகளாக விளங்கும்.

அடுத்து வரும் 5-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

அந்த நகரத்தினுடைய சிறப்பைப் பாடுவதற்கு என்ன அளவு இருக்கிறது? அந்தத் திருவாரூரில் திருமணம் செய்து கொண்ட கணவர்கள் இல்லாதவர்களாகிய பரத்தையர் களுடைய திருமாளிகைகளுக்குள் ஒன்றாக விளங்குவது, சம்புவாகிய சிவபெருமானுடைய வாமபாகத்தில் எழுந்தருளி யிருக்கும் பார்வதி தேவியினுடைய அழகிய தோழியும் பரவை நாச்சியாரும் ஆகும் மங்கைப் பருவத்தினர் திருவவ தாரம் புரிந்தருளிய திருமாளிகை, பாடல் வருமாறு:

"அங்கு ரைக்கென் அளவப் பதியிலார்

தங்கள் மாளிகை யின்னொன்று சம்புவின்

புங்கி னாள்திருச் சேடியர வையாம் மங்கை யார்.அவதாரம்செய் மாளிகை.’’

அங்கு-அந்தத் திருவாரூரினுடைய சிறப்பை; ஆகுபெயர். உரைக்கு-பாடுவதற்கு. என்-என்ன. அளவு-அளவு இருக் கிறது? அப்பதியிலார்- தங்களுக்குத் திருமணம் செய்து கொண்ட கணவர்கள் இல்லாதவர்களாகிய அந்தப் பரத்தை யர்கள்; ஒருமை பன்மை மயக்கம். இலார்: இடைக்குறை, தங்கள்-தங்களுடைய. மாளிகையின்-திருமாளிகைகளுக்குள்: ஒருமை பன்மை மயக்கம். ஒன்று-ஒன்றாக விளங்குவது: சம்புவின்-சுகத்தைச் செய்பவனாகிய வன்மீகநாதனுடைய. பங்கினாள்-வாம பாகத்தில் எழுந்தருளிய நீலலோசனி யினுடைய திரு-அழகிய, ச், சந்தி. சேடி-தோழியாகிய, பரவையாம்-பரவை நாச்சியாராகும்; ஒருமை பன்மை மயக்கம். மங்கையார்-மங்கைப் பருவத்தைப் பெற்றவர். அவதாரம் செய்-திருவவதாரம் செய்தருளிய. மாளிகைதிருமாளிகை.

பிறகு உள்ள 6-ஆம் பாடலின் கருத்து வருமாறு: