பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 215 'படர்ந்து அமைந்த பெரிய பிரகாசம் வீசும் அந்தப் பல அழகிய விதிகளில் நிலத்தைப் பன்றியின் உருவத்தை எடுத்து திருமால் திருவடிகளையும், பிரமதேவன் அன்னப் பறவை யின் உருவத்தை எடுத்துக் கொண்டு திருமுடியையும் தேடியவராகிய வன்மீகநாதர் தம்மைத் தொடர்ந்து பற்றிக் கொண்ட வன்றொண்டராகிய சுந்தரமூர்த்தி நாயனாருக் காகத் தூதுவராக எழுந்தருளி நடந்த செந்தாமரை மலர் களைப் போன்ற திருவடிகளின் நறுமணம் கமழும். பாடல் - வருமாறு:

'படர்ந்த பேரொளிப் பன்மணி வீதிபார் இடங்த ஏனமும் அன்னமும் தேடுவார் தொடர்ந்து கொண்டவன் தொண்டர்க்குத்

தூதுபோய் நடந்த செந்தா மரையடி காறுமால்." படர்ந்த-விரிவாக அமைந்த. பேரொளி-பெரிய பிரகா சத்தை வீசும். ப்: சந்தி. பல்-பல. மணி-அழகைப் பெற்ற வீதி-திருவாரூரில் உள்ள தெருக்கள்; ஒருமை பன்மை மயக்கம். பார்-தரையை. இடந்த-சிவபெருமா னுடைய திருவடிகளைக் காணும் பொருட்டுத் தோண்டிய. ஏனமும்-பன்றியின் வடிவத்தை எடுத்துத் தேடிய திரு மாலும். அன்னமும்-திருமுடியைக் காண்பதற்காக அன்னப் பறவையின் வடிவத்தை எடுத்துக் கொண்டு தேடிய பிரம தேவனும். தேடுவார்-தேடியவராகிய வன்மீக நாதர். தொடர்ந்து-ஒரு முறை, இரு முறை தொடர்ச்சியாக. கொண்ட-தாம் தடுத்து ஆட்கொண்ட,வன்தொண்டர்க்குவன்றொண்டராகிய சுந்தரமூர்த்தி நாயனாருக்காக. த்: சந்தி. தூது-பரவை நாச்சியாரிடம் தூதுவராக, திணை மயக்கம். போய்-எழுந்தருளி. நடந்த-அந்த நாச்சியா ருடைய திருமாளிகைக்கு நடந்த, செந்தாமரை-செந்தா மரை மலர்களைப் போன்ற, ஒருமை பன்மை மயக்கம். அடி-திருவடிகளின் மணம்; ஒருமை பன்மை மயக்கம்; ஆகுபெயர். நாறும்-கமழும். ஆல்: ஈற்றசைநிலை.