பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 பெரிய புராண விளக்கம்

'அந்தப் பழமையான நகரமாகிய திருவாரூர், தொங்கிய சடாபாரத்தைத் தங்கள் தலைகளில் பெற்றவர்களும், சைவ சமயத்தைச் சார்ந்த பக்தர்களும், தவமாகிய செல்வத்தைப் படைத்த தவசிகளும், மகிழ்ச்சியைக் கொண்ட உள்ளங்க ளைப் பெற்ற முனிவர்களும், வேதங்களை முற்றும் அத்திய யனம் செய்து நிறைவேற்றிய வேதியர்களும், தாங்கள் விரும்பிய சிற்றின்பத்துறையில் ஈடுபட்டிருப்பவர்களும் சுற்றி வாழும் பலவேறு இடங்களைப் பெற்று விளங்குவது. பாடல் வருமாறு:

தாழ்ந்த வேணியர், சைவர், தபோதனர்,

வாழ்ந்த சிக்தை முனிவர். மறையவர், வீழ்ந்த இன்பத் துறையுள் விரவுவார் சூழ்ந்த பல்வே றிடத்ததத் தென்னகர்.” இந்தச் செய்யுள் விற்பூட்டுப் பொருள்கோள் அமைந்தது. அத்தொல்-அந்தப் பழமையாகிய நகர்-திருவாரூராகிய நகரம். நகர்-பெரிய தலம்.தாழ்ந்த-தொங்கிய.வேணியர்சடாபாரத்தைத் தங்கள் தலைகளில்பெற்றவர்களும்; ஒருமை பன்மை மயக்கம். சைவர்-சைவ சமயத்தைச் சார்ந்த பக்தர்களும்: ஒருமை பன்மை மயக்கம். தபோதனர்தவத்தையே செல்வமாகக் கொண்ட தவசிகளும்; ஒருமை பன்மை மயக்கம், வாழ்ந்த - மகிழ்ச்சியை அடைந்த. சிந்தை-உள்ளங்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். முனிவர்-முனிவர்களும்; ஒருமை பன்மை மயக்கம். மறைய வர்-நான்கு வேதங்களையும் முறையாக அத்தியயனம் செய்து நிறைவேற்றிய வேதியர்களும்; ஒருமை பன்மை மயக்கம். வீழ்ந்த-தாங்கள் விரும்பிய, இன்பத்துறையுள்சிற்றின்பத் துறைகளில்; ஒருமை பன்மை மயக்கம். விரவு வார்-ஈடுபட்டிருக்கும் ஆடவர்களும் பெண்மணிகளும்; ஒருமை பன்மை மயக்கம். சூழ்ந்த சுற்றி வாழும். பல்பல. வேறு-வேறாகிய இடத்தது-இடங்களைப் பெற்று விளங்குவது; ஒருமை பன்மை மயக்கம்.

3.