பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு - 21

அடுத்து உள்ள 10-ஆம் பாடலின் கருத்து வருமாறு: திருவாரூரில் விளங்கும் வீதிகளில் இருக்கு வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் கற்றுத் தேர்ச்சி பெற்ற வேதியர்கள் கானம் செய்யும் இனிய ஒலிகளே அல்ல; அந்தத் தெருக்களில் போகும் யானைகளும் மாறி மாறிப் பிளிறல்களை உண்டாக் கும்; சிறப்போடு கூடிய தேவர்கள் வன்மீக நாதரைத் தரிசிக் கும் பொருட்டு வருவார்கள்; அவர்களுடைய வருகையல்லா மல் அங்கங்கே கட்டிய தோரணங்களில் தொங்கும் மலர் மாலைகளும் சுற்றிலும் விளங்கும். பாடல் வருமாறு:

'ஆரணங்க ளேஅல்ல மறுகிடை

வார ணங்களும் மாறி முழங்குமால்; சீர ணங்கிய தேவர்க ளேயலால் தோர ணங்களில் தாமமும் சூழுமால்.’ மறுகிடை-திருவாரூரில் உள்ள வீதிகளில்; ஒருமை பன்மை மயக்கம். ஆரணங்களே--இருக்கு வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்களையும் அத்தியயனம் செய்து தேர்ச்சி பெற்ற வேத பாரங்கதர்கள் அந்த வேதங்களை ஒதும் இனிய கானமே; தினை மயக்கம். அல்ல-அல்லா மல். வாரணங்களும்-அந்த வீதிகளில் போகும் யானைகளும். மாறி-மாறி மாறி. முழங்கும்-பிளிறும். ஆல்; அ,ை நிலை. சீர்-சீர்த்தியை. அணங்கிய-பெற்ற தேவர்களே.ட வன்மீக நாதரைத் தரிசிக்கும் பொருட்டுத் தேவலோகத்தி லிருந்து வரும் தேவர்களே. அலால்-அல்லாமல்; இடைக் குறை. தோரணங்களில்-அந்த வீதிகளில் கட்டித் தொங்க விடப்பட்ட தோரணங்களில். தாமமும்- பூமாலைகளும்; ஒருமை பன்மை மயக்கம். சூழும்-சுற்றிலும் விளங்கும். ஆல்:ஈற்றசை நிலை. -

பிறகு வரும் 11-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: