பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 பெரிய புராண விளக்கம்

கொண்ட வள்ளல்.’’, 'பரியின்மேல் வந்த வள்ளல் என்று மாணிக்கவாசகரும் பாடியருளியவற்றைக் காண்க.

பின்பு உள்ள 9-ஆம் பாடவின் கருத்து வருமாறு: பிரகாசம் மிகுதியாக உள்ள அணிகலன்கள் விரவி இருப்பதாலும், அசைத்தல் இல்லாத பெரிய ஆரவாரத் தாலும், விற்கப்படும் பலவகைப்பொருள்கள் வளப்பத்தோடு பல வகைகளில் வந்து சேர்வதாலும், திருவாரூரில் உள்ள கடை வீதிகள் சமுத்திரத்தைப் போல விளங்கின. பாடல் வருமாறு:

விளக்கம் மிக்க கலன்கள் விரவலால் துளக்கில் பேரொலி யால்துன்னு பண்டங்கள் வளத்தொடும்பல வாறு மடுத்தலால் அளக்கர் போன்றன ஆவண விதிகள்.' விளக்கம்-ஒளி. மிக்க-மிகுதியாக உள்ள கலன்கள்-- ஆபரணங்கள். விரவலால்-நகைக் கடைகளில் பரவியிருப்ப தாலும். அந்த ஆபரணங்களாவன: ஒட்டியாணம், தங்கச் சங்கிலி, காறை, கைக்காப்பு, பொன் வளையல், கங்கணம், காலாழி, பீலாழி, மோதிரம், உச்சிப்பூ, மெட்டி, சுட்டி, ஜிமிக்கி, கம்மல், வைர அட்டிகை, புல்லாக்கு, வங்கி முதலி யவை. துளக்கு-மாற்றுதல். இல்- இல்லாத கடைக் குறை. பேரொலியால்-பண்டங்களை விற்பவர்களும் அவற்றை வாங்குபவர்களும் செய்யும் பெரிய ஆரவாரத்தா லும். துன்னு-கடைகளுக்கு வந்து சேரும். பண்டங்கள்பொருள்கள். அவையாவன:அரிசி, துவரம் பருப்பு, உளுந்து, கொத்துக் கடலை, வெந்தயம், மிளகு, சீரகம், வெல்லம், கற்கண்டு, சர்க்கரை, பயிறு, சுக்கு, இஞ்சி, நிலக்கடலை, ஏலம், இலவங்கம், கிராம்பு, ஜாதிக்காய், கடுக்காய் முதலி யவை. வளத்தொடும்-வளப்பத்தோடும். பலவாறு-வண்டி களிலும், ஆட்களின் தலைகளிலும், ஒடங்களிலும் ஆகிய பல வகைகளில். மடுத்தலால்-கடைகளுக்கு வந்து சேர்வதா லும். ஆவண விதிகள்-திருவாரூரில் இருந்த கடை விதிகள். அளக்கர்-சமுத்திரத்தைப் போன்ற-போல விளங்கின.