பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 219

'உள்ளம் ஆர் உரு காதவ ? ஊர்விடை வள்ளலார் திருவா ருர்மருங் கெலாம் தெள்ளும் ஒசைத் திருப்பதி கங்கள்.பைங்

கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்.' இந்தப் பாடல் விற்பூட்டுப் பொருள் கோள் அமைந்தது. ஊர்-தாம் ஏறி ஒட்டும். விடை-இடப் வாகனத்தைப் பெற்ற. வள்ளலார்-வள்ளலாராகிய தியாகராஜப் பெருமானார் வீற்றிருக்கும். திருவாரூர்-திருவாரூரின். மருங்கு-பக்கங்கள்; ஒருமை பன்மை மயக்கம். எலாம்-எல்லாவற்றிலும்; இடைக்குறை. தெள்ளும்-தெளிவாக விளங்கும். ஒசைஇனிய ஒலியைக் கொண்ட திருப்பதிகங்கள்-தேவாரத் திருப்பதிகங்களை. பைங்கிள்ளை-பச்சைக்கிளிகள்; ஒருமை பன்மை மயக்கம். பாடுவ-பக்தர்கள் பாடுவதைக் கேட்டு அவ்வாறே பாடிக்கொண்டிருப்பவையாக விளங்கும். பூவை கள்-நாகணவாய்ப் புட்கள். கேட்பன-அந்தத் திருப்பதிகங் களைக் கேட்டு மகிழ்பவைகளாகத் திகழும். உள்ளம்இந்தக் காட்சியைக் கண்டு தம்முடைய உள்ளத்தில். உருகா தவர்-உருக்கத்தை அடையாதவர். ஆர்-யார் இருக்கிறார்.

வள்ளலார்: வள்ளல் ஆளுரை.”, வள்ளல்மா மழ பாடியுள் மேய மருந்தினை. ’’, ஆமாத்துார் அம்மான் எம் வள்ளல், , 'வள்ளல் இருந்த மலை.’, வள்ளல் வலஞ் சுழி வாணன்.’’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனா ரும், காயந் தன்னுள் புண்டரீ கத்திருந்த வள்ளலை.’,

'ஆரூர் அமர்ந்த எம் வள்ளல்.’, உரைக்கும் திருப்பெயர் வள்ளல்.’’, ‘ஆறை வடதனி வள்ளலை. , புள்ளிருக்கு வேளுர் வள்ளல். , வள்ள லாகிய வான்மியூர் ஈசனே. , மணஞ்சேரிஎம் வள்ளலார். , வள்ளலே போற்றி மணாளா போற்றி.’’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், வள்ளல் எந்த மக்கே துணை.’’ என்று சுந்தரமூர்த்தி

நாயனாரும், வள்ளல் வரவர வந்தொழிந்தான் என் மனத்தே.”, 'வான்பழித்திம் மண்புகுந்து மனிதரை ஆட்