பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 பெரிய புராண விளக்கம்

'செங்கண் மாதர் தெருவில் தெளித்தசெங்

குங்கு மத்தின் குழம்பை அவர்குழல் பொங்கு கோதையிற் பூந்துகள் வீழ்ந்துடன் அங்கண் மேவி அளறு புலர்த்துமால்.’

செம்-சிவந்த கண்-கண்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். மாதர்-விருப்பம் மருவிய பெண்மணிகள்; ஒருமை பன்மை மயக்கம். தெருவில்-திருவாரூரில் உள்ள வீதிகளில்; ஒருமை பன்மை மயக்கம். தெளித்த-தங்களுடைய கைக ளால் தெளித்த, செம்-சிவந்த குங்குமத்தின்-குங்குமப் பூவினுடைய. குழம்பை-அரைத்த குழம்பை. அவர்-அந்தப் பெண்மணிகளுடைய, ஒருமை பன்மை மயக்கம். குழல்கூந்தல்களில் அணிந்த ஒருமை பன்மை மயக்கம். பொங்குநறுமணம் பொங்கி எழும். கோதையில்-மாலைகளில் கட்டி யிருக்கும்; ஒருமை பன்மை மயக்கம், பூம்-மலர்களில் உள்ள ஒருமை பன்மை மயக்கம். துகள்-மகரந்தப்பொடி களின் தொகுதி, ஒருமை பன்மை மயக்கம். வீழ்ந்து-தரை யில் விழுந்து. உடன்-உடனே. அங்கண்-அந்தத் தரை யாகிய இடத்தில். மேவி-படிந்து. அளறு-குங்குமப்பூவி னுடைய குழம்பாகிய சேற்றை. புலர்த்தும்-உலரச் செய்யும், ஆல்: ஈற்றசை.

அடுத்து உள்ள 8-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

தாம் ஏறி நடத்துகின்ற இடப வாகனத்தைப் பெற்ற வள்ளலாராகிய தியாகராஜப்பெருமானார் கோயில்கொண்டு வீற்றிருக்கும் திருவாரூரின் பக்கங்கள் எல்லாவற்றிலும் தெளிவாக இருக்கும் இனிய ஒலியைக் கொண்ட தேவாரத் திருப்பதிகங்களைப் பச்சைக் க்ளிகள் பாடிக்கொண்டிருக்கும்; அந்தப் பதிகங்களை நாகணவாய்ப்புட்கள் கேட்டுக் கொண் டிருக்கும்; இந்தக் காட்சியைக் கண்டு தம்முடைய உள்ளத் தில் உருக்கத்தை அடையாதவர் யார்?’ பாடல் வருமாறு: