பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 பெரிய புராண விளக்கம்

ஈற்றசை நிலை. நிலமகள் முகமோ திலகமோ', திருமகட் கினிய மலர்கொலோ' (கம்ப ராமாயணம், நகரப்படலம்: 2.) என்பது இங்கே ஒப்பு நோக்குதற்கு உரியது.

பிறகு வரும் 13-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

"அத்தகைய பழைய நகரத்திற்கு மன்னனாக விளங்கு பவன், வானத்தில் உதயமாகும் சிவந்த கிரணங்களை விசும் சூரியனுடைய குலத்தில் பிறந்தவனும் நிலைபெற்ற கீர்த்தி யைப் பெற்றவனுமாகிய அநபாயச் சோழ மன்னனுடைய பரம்பரையில் உதித்த முதல்வன், மின்னும் பெருமையைக் கொண்ட மாணிக்கங்களைப் பதித்த ஆபரணங்களை அணிந்த மனுவேந்தன் என்பவன்.”

பாடல் வருமாறு:

அன்ன தொன்னக ருக்கர சாயினான் துன்னு செங்கதி ரோன்வழித் தோன்றினான் மன்னு சீர்அக பாயன் வழிமுதல் மின்னும் மாமணிப் பூண்மனு வேந்தனே."

அன்ன-அத்தகைய சிறப்பைப் பெற்ற. தொல் - பழமையாகிய, நகருக்கு-நகரமாகிய திருவாரூருக்கு. அரசுமன்னன்; திணை மயக்கம். ஆயினான்-ஆக விளங்கு பவன். துன்னு-வானத்தில் உதயமாகும். செம்-சிவந்த. கதிரோன்- கிரணங்களை வீசும் சூரியனுடைய. கதிர்; ஒருமை பன்மை மயக்கம். வழி - குலத்தில், த்:சந்தி. தோன் றினான்-பிறந்தவன். மன்னு-நிலை பெற்று விளங்கும். சீர்-சீர்த்தியைப் பெற்ற, அநபாயன்-அநபாயச் சோழ மன்னனுடைய. வழி-பரம்பரையின். முதல்-முதல்வன்; திணை மயக்கம். மின்னு-மின்னலைப் போல ஒளியை வீசும். மா-பெருமையைப் பெற்ற மணி-மாணிக்கங்களைப் பதித்த ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. பூண்-மகுடம், அங்க வலயம் முதலிய ஆபரணங்களை அணிந்து விளங்கும்: