பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 225

ஒருமை பன்மை மயக்கம். மனு வேந்தன்-மனுநீதிச் சோழ மன்னன். ஏ:ஈற்றசை நிலை. அநபாயச் சோழன் என்பவன் இரண்டாம் குலோத்துங்க சோழமன்னன். இவன் தன் தந்தையாகிய விக்கிரம சோழனால் கி.பி. 1133-ஆம் ஆண் டில் இளவரசனாக நியமிக்கப் பெற்றவன். இவனுடைய சாசனங்களில் உள்ள மெய்க்கீர்த்திகள், திருமன்னி விளங்கு”, 'பூமியும் திருவும் , பூமருவிய திருமடந்தையும். , திரு

மன்னிவரை இருகுவடனைய. ’, 'புகழ்மாது விளங்க. * வீரமே துணை. , பூமே லரிவையும்.’, ‘பூமேவி வளர. ,

‘பூமாது வளர.”, 'திருமகள் சயமகள்’ என்பவை போலப் பல தொடக்கங்களைக் கொண்டவை. இந்த மன்னன் கி.பி.1150ஆம் ஆண்டு வரையில் ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது. இவனைப் பற்றி ஒட்டக்கூத்தர் ஓர் உலாவும், ஒரு பிள்ளைத் தமிழும் பாடியிருக்கிறார். இது, பாடிய வெள்ளைக் கவி யுலா மாலையொடு மீண்டுமவன், பிள்ளைத் தமிழ்மாலை பெற்றோனும். (சங்கர சோழன் உலா, 245) என்பதனால் விளங்கும். - -

அடுத்து உள்ள 14-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'இந்தப் பூமண்டலத்தில் வாழ்ந்து நிலைபெற்ற உயிர்கள் எல்லாவற்றிற்கும் கண்ணையும் உயிரையும் போல விளங்கு பவனும், பெருமை பெற்றவனுமாகிய அரசன் தேவலோகத் தில் வாழும் தேவர்கள் மகிழ்ச்சியை அடையும் வண்ணம் கணக்கு இல்லாத பல யாகங்ளை மாட்சி அமையுமாறு செய்தான். பாடல் வருமாறு:

"மண்ணில் வாழ்தரு மன்னுயிர் கட்கெலாம் கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலான் விண்ணு ளார்மகிழ் வெய்திட வேள்விகள் எண்ணி லாதன மாண இயற்றினான்.” மண்ணில்-இந்தப் பூமண்டலத்தில்.வாழ்தரு-வாழும், மன்-நிலைபெற்ற, உயிர்கட்கு எலாம்-எல்லா உயிர்களுக்

பெ-15