பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 பெரிய புராண விளக்கம்

கும்...எலாம்: இடைக்குறை. கண்ணும்- கண்ணையும். ஆவியும்-உயிரையும். ஆம்-போல விளங்குபவனாகும். காவலான்-அரசனாகிய மனுநீதிச் சோழ மன்னன். விண்தேவலோகத்தில், உளார்-வாழும் தேவர்கள்; ஒருமை பன்மை மயக்கம்; இடைக்குறை. மகிழ்வு-மகிழ்ச்சியை. எய்திட-அடையும் வண்ணம். வேள்விகள்-யாகங்கள். எண்-கணக்கு. இலாதன-இல்லாதவற்றை; இடைக்குறை. மாண-மாட்சி அமையுமாறு. இயற்றினான்-புரிந்தான்.

அரசன் உயிர்களுக்கு உயிரைப் பேர்ன்றவன்: மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்.’’ (புறநானூறு, 186:2),

• உலகிற் கோருயிர்ப்பெற்றியான் பயாபதி என்னும்பேருடை, வெற்றிவேல் மணிமுடி வேந்தர் வேந்தனே' (சூளாமணி, நகரப் படலம். 16), மன்னுயிர் ஞாலக் கின்னுயிர் ஒக்கும் இறை. (பெருங்கதை, 2:11:17-8), உலகினுக் குயிராய் இருந்தனன் இறைகுலோத் துங்கன். (திருவிளையாடற். புராணம், பழியஞ்சின படலம், 44), மல்லலங் களிற்று மாலை வெண்குடை மன்னர் சண்டாய். , ' நல்லுயிர் ஞாலந் தன்னுள் நாமவேல் நம்பி என்றான்.” (சீவக சிந்தா மணி, 2908) என வருபவற்றைக் காண்க.

பிறகு உள்ள 15-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

"மன்னர்களுக்குரிய ஆக்ஞா சக்கரம் உலகம் முழுவதை யும் சூழும் வண்ணமும், சோழ நாட்டைச் சுற்றிலும் உள்ள குறு நிலங்களை ஆட்சி புரியும் குறுநில மன்னர்கள் செலுத் தும் கப்பத்தைச் செலுத்த வந்தவர்கள் தன்னுடைய அரண் மனையின் வாசலில் சுற்றி நிற்கவும், பகைவர்களுடைய பக்ை மையைப் போர்புரிந்து போக்கிவிட்ட சிறந்த பண்புகளால் உண்மையான பழைய மனுவேந்தனால் புரியப் பெற்ற நீதி யையும் தன்னுடைய மனுநீதிச் சோழன் என்ற பெயரையும் உண்டாக்கினான். பாடல் வருமாறு: -