பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 பெரிய புராண் விளக்கம்

பொங்கு மாமறைப் புற்றிடம் கொண்டவர்

எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக் கங்கண் வேண்டும் கிபந்தமா ராய்ந்துளான் துங்க ஆகமம் சொன்ன முறைமையால்.’

திரு ஆரூர்: இது சோழநாட்டில் புகழ்பெற்று விளங்கும் சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திரு நாமங்கள் வன்மீக நாதர், புற்றிடங் கொண்ட நாதர், வீதி விடங்கர் என்பவை. அம்பிகை அல்லியங்கோதை. தீர்த்தங் கள் கமலாலயம் முதலியவை. இது நாகப்பட்டினத்துக்கு மேற்கில் 13-மைல் தூரத்தில் உள்ளது. நிறை செல்வத் திருவாரூர்' என்று இந்தத்தலம் சிறப்பிக்கப்பெறும். இந்தத் தலத்தில் விளங்கும் திருக்கோயிலுக்குத் திருமூலட்டானம், பூங்கோயில் என்ற திருநாமங்கள் உண்டு. இது திருமகள் வழிபட்ட தலம்; பிறந்தவர்களுக்கு முக்தி அளிக்கும் பெருமையைப் பெற்றது. மனுநீதி கண்ட சோழமன்னர் ஆட்சி புரிந்த தலைநகரம். சிதம்பரம் திருக்கோயிலில் புதைக் கப் பட்டிருந்த தேவாரத் திருப்பதிகங்களைக் கண்டுபிடித்து அவற்றை எடுத்து ஏழு திருமுறைகளாக வகுத்து அவற்றை யும், எட்டாம் திருமுறையாகிய திருவாசகத்தையும் திருக் கோவையாரையும், ஒன்பதாம் திருமுறையாகிய திருவிசைப் பாவையும் திருப்பல்லாண்டையும், பத்தாம் திருமுறை யாகிய திருமந்திரத்தையும், பதினோராந் திருமுறையாகிய திருவாலவாயுடையார் அருளிச் செய்த திருமுகப் பாசுரம், காரைக்கால் அம்மையார் அருளிச்செய்த திரு வால்ங்காட்டு மூத்த திருப்பதிகம், முத்த திருப்பதிகம், திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி என்பவற் றையும், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் அருளிச்செய்த சுேத்திரத் திருவெண்பாவையும், சேரமான் பெருமாள் நாயனார் அருளிச் செய்த பொன்வண்ணத் தந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை, திருக்கைலாய ஞான உலா, என்பவற்றையும், நக்கீர தேவ நாயனார் அருளிச் செய்த