பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநகரச் சிறப்பு 229

கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி, திருஈங்கோய் மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருவெழுகூற் றிருக்கை, பெருந்தேன் பாணி, கோபப் பிரசாதம், கார் எட்டு, போற்றித் திருக்கலி வெண்பா, திருமுருகாற்றுப் படை, திருக்கண்ணப்பதேவர் திருமறம் என்பவற்றையும், கல்லாடதேவ நாயனார் அருளிச் செய்த திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்பதையும்,கபில தேவநாயனார் அருளிச் செய்த மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை, சிவபெரு மான் திருவிரட்டை மணிமாலை,சிவபெருமான் திருவந்தாதி என்பவற்றையும், பரணதேவ நாயனார் அருளிச்செய்த சிவ பெருமான் திருவந்தாதி என்பதையும், இளம்பெருமான் அடி கள் அருளிச் செய்த சிவபெருமான் திருமும்மணிக்கோவை என்பதையும்,அதிரா அடிகள் அருளிச் செய்த மூத்த பிள்ளை யார் திருமும்மணிக்கோவை என்பதையும், பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்த கோயில் நான்மணி மாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடை மருதூர் மும் மணிக்கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திரு வொற்றியூர்ஒருபாஒருபது என்பவற்றையும்,நம்பியாண்டார் நம்பி அருளிச்செய்த திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை, கோயில் திருப்பண்ணியர் விருத்தம், திருத் தொண்டர் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருவந் தாதி, ஆளுடைய பிள்ளையார் திருச்சண்டை விருத்தம்,ஆளு டைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை, ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை,ஆளுடையபிள்ளையார் திருக் கலம்பகம்,ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை,திருநாவுக் கரசு தேவர் திருவேகாதச மாலை என்பவற்றையும் செப் பேடுகளில் பொறிக்கச் செய்து தியாகேசப் பெருமானுடைய சந்நிதியில் ஏற்றுவித்த அபய குலசேகரச் சோழமாமன்னரும், அந்தப் பதினொரு திருமுறைகளுக்குப் பின்னால் சேக்கிழார் நாயனார் அருளிச் செய்த பெரிய புராணத்தைப் பன்னிரண் டாம் திருமுறை என்று வகுத்து அதனையும் செப்பேடுகளில் வரையச் செய்து தியாகேசர் சந்நிதியில் ஏற்றுவித்த