பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 பெரிய புராண விளக்கம்

அனபாய சோழமாமன்னரும்ஆட்சி புரிந்த தலைநகரம் இது. சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையை அருளிச் செய்த தேவாசிரயன் என்னும் ஆயிரக்கால் மண்டபமும், அந்த நாயனார் விருத்தாசலத்தில் மணிமுத்த நதியில் இட்ட பொன்னைப் பரவை நாச்சியாருக்கு எடுத்து அளித்த கமலாலயம் என்னும் திருக்குளமும் விளங்கும் தலம் இது. சுந்தரமூர்த்தி நாயனாருக்காகத் தியாகேசர் நடுஇரவில் பரவை நாச்சியாரிடம் தூது சென்ற தலமும் இது. அடியேற் கெளிவந்த தூதனை' என்று சுந்தரமூர்த்தி நாயனார் பாடியருளியுள்ளார். காஞ்சீபுரத்தில் ஒரு கண்ணின் பார் வையைப் பெற்ற அந்த நாயனார், திருவாரூரைப் பற்றிச் செந்துருத்திப் பண்ணில் ஒரு திருப்பதிகத்தைப் பாடியருளி மற்றொரு கண்ணின் ப்ார்வையையும் பெற்றார். அந்தத் திருப்பதிகத்தில் உள்ள முதற் பாசுரம் வருமாறு: -

'மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று

முகத்தால் மிகவாடி ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்

அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவாரூரீர்

வாழ்ந்து போத்ரே.

சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரமூர்த்தி நாயனா ாடு நட்புக்கொண்ட தலம் இது. விறன்மிண்ட நாய னர். நமிநந்தியடிகள் நாயனார், செருத்துணை நாயனார், அண்டியடிகள் நாயனார், கழற்சிங்க நாயனார் ஆகிய நாயன் மார்கள் வழிபட்டு முக்தியை அடைந்த தலம் இது. சப்த விடங்கத் தலங்களுக்குள் இது முதலாவது. திருவாரூர்த் தேரழகு என்பது ஒரு பழமொழி. இந்தத் தலத்தில் திருக்

ரே

கோயில், குளம், செங்கழுநீர் ஓடை என்பவற்றில் ஒவ்வொன் 'றும் ஐந்து ஐந்து வேலிகளின் பரப்புடையது என்பர்.