பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வரலாறு

தொண்டை மண்டலத்தில் பாலாறு ஒடுகின்றது. அதில் இருபத்து நான்கு கோட்டங்கள் உண்டு. அவற்றுள் புலியூர்க் கோட்டம் என்பது ஒன்று. அந்தக் கோட்டத்தில் புகழ் பெற்று விளங்குவது குன்றை வளநாடு. அதன் தலை நகரம் குன்றத்துார். அந்த ஊரில் சேக்கிழார் என்ற பரம்பரையினர் வாழ்ந்து வந்தார்கள். அந்த ஊரில் நாற்பெத்தெண்ணாயிரம் சைவவேளாளர்கள் வாழ்ந்தார் கள். கூடல்கிழான், புரிசைகிழான், வெண்குளப்பாக்கிழான், வரிசைக்குளத்துக்கிழான் முதலியவர்கள் இருத்தார்கள். அவர்களுக்குள் ஒருவர் அருள்மொழித்தேவர் என்பவர். அவருடைய தம்பியார் பாலறாவாயர் என்பவர்.

வாயிலார் நாயனார், சத்திநாயனார், விறல்மிண்ட நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சாக்கிய நாயனார், கோட்புலி நாயனார், மானக்கஞ்சாற நாயனார். ஏயர்கோன் கலிக்காம நாயனார், இளையான்குடி மாற நாயனார், மூர்க்க நாயனார், அரிவாட்டாய் நாயனார், செருத்துணை நாயனார், முனையடுவார் நாயனார் என்ற பதின்மூன்று பேர்களும் சைவவேளாளர்கள். • . . . . . . . .