பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 - பெரிய புராண விளக்கம்

இப் பெரிய புராணமானது தன்னை உணர்ந்தவர் களுக்கு அன்றி மற்றவர்களுக்குத் தமிழ் வேதமாகிய தேவாரத்தின் வரலாறும் மகிமையும் ஒரோ விடங்களில் அதன் பொருளும் லிளங்குதல் கூடாமையானும், தன்னை அத்தியந்த ஆசையுடன் ஒதுவோர்க்கும் கேட்போர்க்கும் பத்தி வைராக்கிய ஞானங்களைப் பயக்கும் கருவியாய் இருத்தவானும், சிலஞானசித்தியார் திருக்களிற்றுப்படி யார் முதலிய சைவ சித்தாந்த நூல்களினும் உரைகளி லும் சிவானுபவத்துக்குத் தான் கூறும் நாயன்மார் பலருடைய சரித்திரங்களில் உதாரணம் காட்டுவதானும் சர்வாதிகாரிகளாகிய ஆதிசைவருக்கும் பிறருக்கும் தான் அதிகரித்த தனியடியார் அறுபத்து மூவரும் தொகையடி யார் ஒன்பதின்மரும் ஆகிய திருத்தொண்டர் எழுபத் திருவருடைய் சரித்திரங்களையும் உணர்ந்து அவர்கள் மகிமையைத் தெரிந்தாலன்றிச் சிவாலயங்கள் எங்கும் முறையே அவர்களுக்குப் பிரதிட்டை பூசை திருவிழாக்கள் செய்கற்கண்ணும் அவைகளைச் சேவித்தற்கண்னும் ஊக்கமும் அன்பும் நிகழாமையானும், சைவர்கள் யாவரும் ஒருதலையாகக் கற்று உணர வேண்டும் நூலாம்.