பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை - | ".

குத் தில்லைவாழந்தணர் மடபதிகள் முதலிய எண்ணி றந்த அடியார்கள்கேட்கச் சிதம்பரசபாநாதர், உலகெலாம்" என்று அடி எடுத்துக் கொடுத்தருளினார் எனவும், இது. முற்றிய பின்னர் அநபாய சோழ மகா ராஜாவுக்கு, சோழனே, சேக்கிழான் நாம் உலகெலாம் என்று அடி. எடுத்துக் கொடுக்க நம்முடைய தொண்டர்களது அடிமைத் திறத்தை விரித்துப் புராணம் பாடி முடித்தான் நீ அதைக் கேள்' என்று யாவரும் கேட்ட அருளிச் செய்தார் எனவும் தில்லைவாழந்தணர்களுள் ஒருவராகிய சிவானுபூதிமான் எனப் பிரசித்தி பெற்ற உமாபதி சிவாசாரியார் சேக்கிழார் புராணத்துக் கூறுதலானும், பரமசிவன் உமாதேவிக்குச் சதுர்யுக தருமங்களும் கூறிய பின்னர், இனிக் கலியுகத்திலே அறுபத்து மூன்று தொண்டர்கள் பிறந்து தம்மேற் பத்தி செய்வார்கள் எனவும், அவர்கள் சரித்திரத்தை உப மன்னியு முனிவர் பத்தர் குழாங்கட்குக் கூறுவர் எனவும் கூறி அச் சரித்திரத்தை முன் உரைத்தமை பரமேதிகாச மாகிய சிவரகசியத்திலே நவமாம்மிசத்திற் பெறப்படுதவா னும், சங்கராசாரியர் இப்பெரிய, புராணத்துட் கூறப்படும். அறுபத்து மூவருள் சிலரது அடிமைத் திறத்தை, வழியிலும் இடப்பட்ட செருப்பானது பசுபதியின் அங்கத்துக்குக் கூர்ச்சமாகின்றது. வாய் நிறைந்த நீரால் நனைத்தல் புரப்பகைவருக்குத் திவ்வியாபிஷேகம் ஆகின்றது. சற்றே. புசிக்கப்பட்ட மாமிச சேஷத்தின் கவளமானது திவ்வியோ பகாரம் ஆகின்றது. வசைரன் பக்தச்ரேஷ்டன்ஆகின்றான். பத்தி எதைச் செய்கின்றிலது?’ எனச் சிவானந்தலகரி யிலும், "கிரீசரே,மனைவிக்கும் புதல்வனுக்கும் தந்தைக்கும் துரோகம் செய்தவர்களுக்குப் பிரசன்னமாயினர். நானோ பிறருக்குத் துரோகம் சிறிதும் செய்ய வல்லவன் அல்லன். என்னிடத்து நீர் எவ்வாறு பிரிதி செய்வீர்! அறியேன்.” எனச் சிவபுசங்கத்திலும் சிறப்பித்து உரைத்தவானும் அப் பிராமணர் கூற்றுத் தூரம் போய்த் துச்சமாய்விடும்.