பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Jť) பெரிய புராண விளக்கம்

தான தயை வேதியனைத் தாள் இரண்டும் - சேதிப்பக், கண்டீசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே, சண்டிசர் தஞ்செயலாற்றான்.' எனவும், "செய்யில் உகுத்த திருப்படி. மாற்றதனை, ஐயஇதுவமுது செய்யெனலே-பையவிருந்: துட்டி அறுப்பதற்கே பூட்டி அறுத்தவரை, நாட்டியுரை செய்வதே நாம்' எனவும் வரும்.

இங்ங்ணம் கூறிய சரியை முதலிய நான்கு பாதங்களிலே நின்று முத்தி பெற்ற மெய்யடியார்களுட் சிறந்த தனியடி யார் அறுபத்து மூவரும் தொகையடியார் ஒன்பதின்மரும் ஆகிய திருத்தொண்டர்எழுபத்திருவருடைய சதித்திரத்தைக் கனகசபையின் கண்ணே ஆனந்த நிருத்தம் செய்தருளும் கருணாநிதியாகிய சிவனது திருவருளினாலே பசுகரணம் எல்லாம் சிவகரணமாய் நிகழப் பெற்ற சிவாநுபூதி மானாகிய குன்றத்துார்ச் சேக்கிழார் நாயனார், தமிழ் உலகம் உய்தற்பொருட்டு, திருத்தொண்டர் புராணம் எனப் பெயர் தந்து விரித்தருளிச் செய்தார். இப்புராணம் தன்னை ஒதல் கேட்டல் செய்வார்க்குச் சிவனடியார்களது அதியற்புத பக்தித் திறத்தையும் அவர்கட்கு எளிவந்த சிவனது அதியற்புதப் பிரசாதத்தையும் உணர்த்தி, அவர் நெஞ்சை அழலிடைப்பட்ட மெழுகு போலக் கசிந்துருகச் செய்தலின் தனக்கு உயர்வு ஒப்பு இன்றி விளங்கும் பெருமையுடைமை பற்றி, பெரிய புராணம் எனவும் பெயர் பெற்றது. இப் பெரிய புராணம் சைவ சித்தாந்த நூற்கருத்தோடு மாறுபடாத வேக முடிவாகிய உபனி சித்துக்களின் காற்பரிங்களை உள்ளடக்கிய தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு என்னும் நான்கனோடு கூட்டி, கல்வியறிவு ஒழுக்கங்களான் ஆன்ற மகத்துக்களாலே தொன்று தொட்டு அருட்பா என வழங்கப்படும்.

பிரஞ்ஞை இல்லாத சில பிராமணர் இப்பெரிய புரா ணத்துக்கு அப்பிரமாணியம் பேசுவர். இப்புராணத்துக்