பக்கம்:பெரிய புராண விளக்கம்-1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 9

நிலைபெறுதல் ஆகிய பெரும் பயனைத் தருதல் மாத்திரையே அன்றிப் பசிதீர்தலாகிய அவரந்தரப் பயனையும் தருதல்போல, சரியை முதலியனவும் சிவ ஞானத்தைப் பயத்தல் மாத்திரையே அன்றித் தத்தம் பதமுத்தியாகிய அவாந்தரப் பயனையும் பயப்பனவாம்.

மேற்கூறிப் போந்த சரியை முதலிய நான்கு பாதங் களுள்ளும், சரியை கிரியை என்னும் இரண்டும் கூடி, சிவ தருமம் என ஒரு பெயரான் வழங்கவும் பெறும். அந்தச் சிவ தர்மம மெல்வினை வல்வினை என இரு வகைப்படும். அவற் றுள், மெல்வினையாவது சைவாகமத்திலே சரியை கிரியை 'களுக்கு விதித்தவழி ஒழுகும் விதி மார்க்கம். வல்வினை யாவது அவ்விதி மார்க்கத்தில் வழுவாது நின்று அந்நிலை பின் முதிர்ச்சியினாலே பின் உண்டாகிய பிறப்பின் கண்ணே சிவனிடத்தில் எல்லையின்றி எழுந்து அதி தீவிர மாய முறுகி வளரும் அன்பின் பெருக்கத்தினாலே உலக நெறி கடந்து ஒழுகும் பத்தி மார்க்கம்'.இதற்குப்பிரமாணம் திருக்களிற்றுப்படியார். 'நல்லசிவ தர்மத்தால் நல்ல சிவ யோகத்தால், நல்லசிவ ஞானத்தால் நானழிய, வல்லதனால்? யாரேனும் அன்புசெயின் அங்கே தலைப் படும்காண், ஆரேனும் காணா அரன் எனவும், ' மெல் வினையே என்ன வியனுலகி னார்க்கரிய, வல்வினையே என்ன வரும்இரண்டும்- சொல்லிற், சிலதன்ம மாமதனிற் சென்றதிலே செல்வாய், பவக ன் ம ம் நீங்கும் படி," எனவும் 'ஆதியை அர்ச்சித்தற் கங்கமும் அங்கங்கே, தீதில அறம்பலவும் செய்வனவும் - வேதியனே, கல் வினையாம் என்று நமக்கும் எளி தானவற்றை, மெல் வினையே என்றது.நாம் வேறு' எனவும், "வரங்கள் தரும் செய்ய வ யி ர வர் க் கு த் தங்கள், கரங்களினால் அன்று கறியாக - இரங்காதே, கொல் வி ைன யே செய்யும் கொடுவினையே ஆனவற்றை, வல்வினையே என்றது.நாம் மற்று, எனவும், பாதகமே என்றும் பழி.என்றும்"பாராதே,